சூப்பர் ஹிட் ஹிந்தி படத்தின் ரீமேக்கில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்

சென்னை : மகாநடி திரைப்படம் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் தேசிய விருதையும் பெற்றுத்தந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

பெண் குயின், மிஸ் இந்தியா ஆகிய படங்களை தொடர்ந்து விரைவில் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையில் நடித்துள்ள குட் லக் சகி
திரைப்படம் வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து கீர்த்தி சுரேஷின் அப்பா சுரேஷ் குமார் தயாரிப்பில் வாஷி என்ற படத்திலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் ரோலில் நடிக்கிறார்.

மலையாளம்,தெலுங்கு,தமிழ் என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் இப்போது ஹிந்தியில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற பிரபல திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஃபேவரைட் ஹீரோயின்

ஃபேவரைட் ஹீரோயின்

க்யூட்டான நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோயினியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய்,ரஜினிகாந்த், தனுஷ், சிவகார்த்திகேயன்,சூர்யா,விக்ரம் என தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். ஹீரோக்களுடன் ஜோடி போட்டு வரும் அதே சமயம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளிலும் நடிக்க ஆர்வம் காட்டி வரும் இவரின் அசாத்திய நடிப்புத் திறமைக்கு தீனி போடும் வகையில் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்து தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்று குவித்தார்.

மகாநடி

மகாநடி

சமீப காலமாகவே வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் அதிக அளவில் உருவாக தமிழ் சினிமாவின் ராணியாக திகழ்ந்து வரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் மகாநடியில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு வான் அளவில் புகழ் ஓங்கியது. மகாநடியில் கீர்த்தி சுரேஷின் நடிப்பை பார்த்து பலரும் வியந்து போக அப்படியே சாவித்திரியை உரித்து வைத்தது போல அச்சு அசலாக நடித்து அனைவரையும் வியக்கவைத்த கீர்த்தி சுரேஷுக்கு அதைத் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் பல கதைகள் குவிந்தது. மகாநடி வெற்றியைத் தொடர்ந்து பெண் குயின், மிஸ் இந்தியா போன்ற திரைப்படங்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து குட் லக் சகி என்ற திரைப்படமும் வெளியாக உள்ளது இதில் நடிகர் ஆதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

Recommended Video

தடுப்பூசி கண்டிப்பா போடுங்க | Actress Keerthy Suresh Awareness Video | Vaccine
அண்ணாத்த

அண்ணாத்த

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்ற ஆண்டு இறுதியில் ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த இரண்டு டெக்னீசியன்களுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பிறகு நீண்ட நாட்களாக படப்பிடிப்பு தொடங்கப்படாமலேயே இருக்க ஹைதராபாத்தில் எடுக்க இருந்த சில காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டது. அதில் ரஜினிகாந்த் மற்றும் கீர்த்தி சுரேஷுக்கு இடையேயான காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. மீதமிருந்த ஒரு சில பேட்ச் வொர்க் காட்சிகளை ரஜினிகாந்த் நேரடியாக ஹைதராபாத்துக்கு சென்று நடித்து முடித்துக் கொடுத்துள்ளார். அண்ணாத்த படத்தில் நடிகை நயன்தாரா மற்றொரு கதாநாயகியாக நடிக்க 90களின் கனவுக் கன்னியாக வலம் வந்த குஷ்பு மற்றும் மீனா இதில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றனர்.

சிரஞ்சீவிக்கு தங்கையாக

சிரஞ்சீவிக்கு தங்கையாக

அதேசமயம் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகிவரும் மரக்கார் என்ற சரித்திர திரைப்படத்திலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் பரசுராம் இயக்கத்தில் உருவாகி வரும் சர்க்காரு வாரி பாட்டா படத்தை முடித்த கீர்த்தி சுரேஷ் அதைத் தொடர்ந்து மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு தங்கையாக போலே ஷங்கர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழில் அஜீத் நடிப்பில் பிரமாண்ட வெற்றிபெற்ற வேதாளம் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தெலுங்கு ரீமேக் போலே ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட நடிகர் சிரஞ்சீவியின் பிறந்த நாளை முன்னிட்டு போலே ஷங்கர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையதளத்தை தெறிக்க விட்டது. இவ்வாறு தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் பம்பரமாய் சுழன்று சுழன்று நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக அப்பா சுரேஷ் குமாரின் தயாரிப்பில் வாஷி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மிமி ரீமேக்

மிமி ரீமேக்

இந்த நிலையில் லேட்டஸ்ட் அப்டேட்டாக இந்தியில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.ஹிந்தியில் க்ரிதி சானொன் மற்றும் பங்கஜ் திரிபாதி நடிப்பில் ஓடிடியில் நேரடியாக வெளியான மிமி திரைப்படம் ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இயக்குனர் லட்சுமன் உர்டேக்கர் இதை இயக்கியிருந்தார். இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருக்க படத்தில் இடம்பெற்ற பரம சுந்தரி என்ற கலர்ஃபுல்லான குத்துப் பாடல் இப்பொழுது இணையதளத்தை கலக்கி ட்ரெண்டிங்கில் உள்ளது. இப்பாடலில் க்ரீத்தி சனோனின் நடனத்தைப் பார்த்து மயங்காத ஆட்களே இருக்க முடியாது அந்த அளவிற்கு மிகவும் துள்ளலுடன் நடனமாடி இருப்பார்.

இருமொழிகளிலும் நடிக்கிறார்

இருமொழிகளிலும் நடிக்கிறார்

இப்பொழுது இந்தியா முழுவதும் இவருக்கு ரசிகர்கள் எக்கச்சக்கமாக உருவாகி உள்ளனர். இந்தியில் தாறுமாறான வெற்றி பெற்றதை அடுத்து மிமி தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் ரீமேக் செய்யப்பட பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்க இதில் நடிகை கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது ஒரு கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதை என்பதால் கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் கட்டாயமாக நடிப்பார் என கூறப்படுகிறது. இப்பொழுது இது குறித்த தகவல்கள் வெளி வந்திருக்கும் நிலையில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X