»   »  வாய்ப்புக்காக படுக்கை: அர்ஜுன் பட நடிகை பரபரப்பு பேட்டி

வாய்ப்புக்காக படுக்கை: அர்ஜுன் பட நடிகை பரபரப்பு பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: திரைத்துறையில் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளதை உறுதி செய்துள்ளார் நடிகை ஸ்ருதி ஹரிஹரன்.

பெங்களூரில் வளர்ந்த தமிழ் பொண்ணு ஸ்ருதி ஹரிஹரன். கன்னடம், மலையாளம், தமிழ் படங்களில் நடித்து வருகிறார். அர்ஜுனின் நிபுணன் படத்தில் கூட நடித்திருந்தார்.

ஸ்ருதி சூப்பர் டாக் டைம் என்கிற டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது குறித்து பேசினார்.

படுக்கை

படுக்கை

சினிமாவில் வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது என்பது கதையல்ல நிஜம். அது இன்னும் கூட நடக்கத்தான் செய்கிறது என்கிறார் ஸ்ருதி.

குற்றம்

குற்றம்

பட வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைப்பது குற்றம். ஆனால் அந்த குற்றத்தை கண்டிப்பார் யாரும் இல்லை. அதனால் சர்வ சாதாரணமாக நடக்கிறது என்று ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

திறமை

திறமை

ஒரு படத்தில் நடிக்க தேர்வு செய்தால் அவரின் திறமைக்காக மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். திரைத்துறையில் பெரிய ஆளாக ஆசைப்பட்டு கண்டதை எல்லாம் செய்பவர்களுக்கு வாய்ப்பு அளிக்கக் கூடாது என்று ஸ்ருதி கூறியுள்ளார்.

ஹிமா ஷங்கர்

ஹிமா ஷங்கர்

படுக்கைக்கு வந்தால் நடிக்க வாய்ப்பு தருவதாக தன்னிடம் 3 பேர் கேட்டனர் என்று மலையாள நடிகை ஹிமா ஷங்கர் கடந்த வாரம் தெரிவித்தார். வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்படுவது குறித்து ஒவ்வொரு நடிகையாக பேசத் துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Shruti Hariharan said that casting couch does exist in the film industry. She said so in a television programme.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil