»   »  தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கும் ஒரு காலம் வரும் - கேத்தரின் தெரசா

தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கும் ஒரு காலம் வரும் - கேத்தரின் தெரசா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு இணையாக நடிகைகளும் சம்பளம் வாங்கும் காலம் வரும் என்று நடிகை கேத்தரின் தெரசா நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

மெட்ராஸ் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் கேத்தரின் தெரசா. மெட்ராஸ் படத்தில் கலையரசியாக வந்த இவரின் நடிப்பு பலரையும் கவர்ந்தது.


Catherine Tresa Talks About Cine Industry

தற்போது பாண்டிராஜின் கதகளி படத்தில் விஷாலுடன் இணைந்து நடித்திருக்கிறார். நாளை இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகிறது.


இந்நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு இணையாக நடிகைகளும் சம்பளம் வாங்கும் காலம் வரும் என்று தெரிவித்திருக்கிறார்.


Catherine Tresa Talks About Cine Industry

இது குறித்து அவர் கூறும்போது "ஆண்களுக்கு இணையாக பெண்களும் மதிக்கப்படவேண்டும் என்றே நானும் கருதுகிறேன். சினிமாவிலும் அது வரவேண்டும், அதற்காக சினிமாவில் ஒரேயடியாக முக்கியத்துவம் இல்லை என்று கூறிவிட முடியாது.


சமீப காலமாக பெண்களின் முக்கித்துவத்தை உணர்த்தும் வகையிலான படங்கள் அதிகளவில் வர ஆரம்பித்து இருக்கின்றன. மாயா போன்ற படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.


எனவே நடிகர்களுக்கு இணையாக நடிகைகளும் சம்பளம் வாங்கும் காலம் விரைவில் வரும் என்று நான் நம்புகிறேன்" இவ்வாறு கேத்தரின் தெரசா நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

English summary
"In Cine Industry Actress Equal to Actor Salary and other Things, That Time Will Come Soon" Catherine Tresa says in Recent Interview.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil