»   »  கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போச்சே: ஃபீல் பண்ணும் நயன்தாரா, ஸ்ரீதேவி?

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போச்சே: ஃபீல் பண்ணும் நயன்தாரா, ஸ்ரீதேவி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகுபலி படத்தில் நயன்தாரா உள்பட சில பிரபலங்கள் நடிக்க மறுத்துள்ளனர்.

எஸ். எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான பாகுபலி 2 படம் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.


அனைவரும் பாகுபலி படம் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.


பிரபலங்கள்

பிரபலங்கள்

பாகுபலி படத்தில் நடிக்க நமக்கு சான்ஸ் கிடைக்காமல் போச்சே என்று சில நடிகர், நடிகைகள் ஃபீல் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் பாகுபலியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அதை சிலர் ஏற்க மறுத்துள்ளனர்.


ரித்திக் ரோஷன்

ரித்திக் ரோஷன்

பாகுபலி கதாபாத்திரத்தில் நடிக்க ராஜமவுலி முதலில் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனிடம் தான் கேட்டுள்ளார். அவர் டேட்ஸ் பிரச்சனையால் நடிக்க மறுக்க அந்த வாய்ப்பு பிரபாஸுக்கு கிடைத்துள்ளது.


ஜான் ஆபிரகாம்

ஜான் ஆபிரகாம்

பல்லாள தேவன் கதாபாத்திரத்திற்கு பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாமிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அவர் முடியாது என்று கூறிய பிறகே ராணா அந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


நயன்தாரா

நயன்தாரா

அனுஷ்கா நடித்த தேவசேனா கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் நயன்தாராவிடம் தான் கேட்டுள்ளனர். அவர் நடிக்க மறுக்கவே அனுஷ்கா தேவசேனாவாகிவிட்டார்.


ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி

ராஜமாதா சிவகாமியாக நடிக்க வந்த வாய்ப்பை ஸ்ரீதேவி ஏற்க மறுத்துவிட்டார். ஓவராக அவர் சம்பளம் கேட்டதால் அந்த வாய்ப்பு ரம்யா கிருஷ்ணனுக்கு சென்றது.


சோனம் கபூர்

சோனம் கபூர்

தமன்னாவின் கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகை சோனம் கபூரிடம் கேட்கப்பட்டுள்ளது. அவர் நடிக்க மறுத்த பிறகே தமன்னாவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.


English summary
Bollywood celebs Hrithik Roshan, John Abraham, Sonam Kapoor, Sri Devi and Kollywood sensation Nayanthara have refused to act in Baahubali.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil