»   »  ஹாலிவுட் செலீனா!!

ஹாலிவுட் செலீனா!!

Subscribe to Oneindia Tamil

இந்தித் திரையுலகை தனது இளமைத் துடிப்பால் கிறங்கடித்து வரும் செலீனா ஜெட்லி, ஹாலிவுட்டில் முழுமையாக ஐக்கியமாகி விடுவார் போலத் தெரிகிறது. தனது முதல் ஆங்கிலப் படத்தை முடித்துள்ள அவர் அடுத்து ஒரு படத்தில் புக் ஆகியுள்ளார்.

இந்தியத் திரையுலகம் கண்ட பாம்களில் குண்டுகளில், வண்ணமயமானவர் செலீனா.

கவர்ச்சி அலையால் பாலிவுட் ரசிகர்களை திணறடித்த செலீனா தற்போது ஹாலிவுட்டுக்கு ஏற்றுமதியாகியுள்ளார். அவர் நடித்துள்ள முதல் ஹாலிவுட் படமான லவ் ஹேஸ் நோ லாங்குவேஜ் படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் சமீபத்தில்தான் நியூசிலாந்தில் முடிவடைந்தது.

இப்போது மேலும் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகவுள்ளார் செலீனா.

இந் நிலையில் ஹாலிவுட்டில் நடந்த கவர்ச்சிமிகு நிகழ்ச்சி ஒன்றில் செலீனா கலந்து கொண்டு அத்தனை பேரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார். உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள் 21 பேர் கலந்து கொண்ட வானிட்டி பேர் பத்திரைக்கைக்கான போட்டோ செஷன் அது.

இந்த செஷனில் செலீனாவுடன் பங்கற்றவர்களில் ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி, டிவி நிகழ்ச்சி புகழ் ஓப்ரா வின்பிரே, இமான், போனோ, மடோனா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் அடக்கம்.

செலீனா இதில் மயக்க வைக்கும் சிவப்பு நிற சேலையில் படு கெட்டப்பாக வந்திருந்தார். அவரது உருவமும், காஸ்ட்யூமும், ஸ்டைலும், கிளாமரும் வந்திருந்தோரின் கவனத்தை ஈர்த்தன.

பல ஹாலிவுட் ரசிகர்கள் செலீனாவிடம் பாய்ந்தனர் - ஆட்டோகிராப் வாங்குவதற்காக.

வானிட்டி பேர் ஷோ குறித்து செலீனா கூறுகையில், இது பெருமையான ஒரு நிகழ்ச்சி. ஹாலிவுட்டின் பெரும் தலைகள் பலரும் வந்திருந்தனர். இது ஒரு நிதி சேகரிப்பு நிகழ்ச்சி. இதில் நான் கலந்து கொண்டதற்காக பெருமைப்படுகிறேன் என்றார்.

சமீபத்தில் நடந்த ஒரு கருத்துக் கணிப்பில் பாலிவுட்டின் செமத்தியான கிளாமர் பெண்ணாக செலீனாவை ரசிகர்கள் தேர்வு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil