»   »  மாக்ஸிம் செலீனா!

மாக்ஸிம் செலீனா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரபல மாக்ஸிம் பத்திரிகையின் அட்டைப் படத்தில் பாலிவுட் ஹாட் ஸ்டார் செலீனா ஜெட்லி இடம் பெற்றுள்ளார். விலங்குகள் மீது செலீனா கொண்டுள்ள அன்புக்கு மரியாதை செய்யும் வகையில், இந்த மரியாதையை மேக்ஸிம் கொடுத்துள்ளதாம்.

பாலிவுட்டை தனது கிளாமர் அலையால் கலக்கி வருபவர் செலீனா ஜெட்லி. பரந்து விரிந்த அவரது கவர்ச்சியால் ரசிகர்கள் கிறங்கிப் ேபாய்க் கிடக்கும் நிலையில் அவரது மனசுக்குள் விலங்குகள் மீதான பாசம் சமீபத்தில் வெளிப்பட்டது.

விலங்குகள் மீதான பரிவுணர்ச்சிக்கான மக்கள் அமைப்பு என்ற அமைப்பு சமீபத்தில், பல்வேறு பகுதிகளிலிருந்து பிடித்து வரப்படும் யானைகளை மும்பை நகருக்குள் அனுமதிக்கக் கூடாது என்று போராடியது.

தங்களது போராட்டத்திற்கு எம்.பிக்கள் மேனகா காந்தி, சத்ருகன் சின்ஹா, பிரியா தத் மற்றும் பல்வேறு பிரபலங்களின் ஆதரவையும் கோரியது. இந்த அமைப்பு எடுத்த முயற்சியின் விளைவாக மும்பைக்குள் யானைகளைக் கொண்டு வர தடை விதிக்கப்பட்டது.

இதுதொடர்பாக நடந்த நிகழ்ச்சியில் செலீனா ஜெட்லியும் கலந்து கொண்டு யானைகளுக்காகப் பரிந்து பேசினார். அவர் கூறஉகையில், யானைகள் புத்திசாலித்தனமானைவை. உணர்ச்சிபூர்வமானவை. மனிதர்களைப் போலவே தங்களது குழுவில் எந்த யானையாவது இறந்தால் அதற்காக கண்ணீர் விட்டு அழுது தங்களது சோகத்தை வெளிப்படுத்தும்.

ஆனால் யானைகளைப் பிடித்து வைப்பதன் மூலம் அவற்றின் பாதுகாப்பும், சுகாதாரமும் கேள்விக்குறியாகி விடுகிறது.

மும்பைக்கு நான் வந்தபோது பல யானைகள் பாதுகாப்பின்றியும், சுகாதாரமின்றியும் வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்து போனேன். இதுகுறித்து விலங்குகள் மீதான பரிவுணர்ச்சிக்கான மக்கள் அமைப்பு நடவடிக்கை எடுத்து வருவது ஆறுதல் அளிக்கிறது.

எனக்கு நிறைய இளைஞர்கள் ரசிகர்களாக உள்ளனர். என்னுடன் சேர்ந்து அவர்களும் யானைகளுக்காக பரிந்து பேச வேண்டும், அவற்றின் நலனுக்காக பாடுபட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன் என்றார் செலீனா.

செலீனாவின் இந்தப் பேச்சுதான் மாக்ஸிம் பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் செலீனாவின் படம் இடம் பெற வழி வகுத்துள்ளதாம்.

பேஷ், பேஷ் ரொம்ப நன்னா இருக்கு!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil