»   »  இரட்டை குழந்தைக்கு தாயாகி அதில் ஒன்றை இழந்து வாடும் பிரபல நடிகை

இரட்டை குழந்தைக்கு தாயாகி அதில் ஒன்றை இழந்து வாடும் பிரபல நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil
Ranveer Singh Birthday Special- 5 lesser known facts about Bollywood’s Filmibeat Tamil

துபாய்: பிரபல பாலிவுட் நடிகை செலினா ஜெட்லிக்கு இரட்டை குழந்தை பிறந்து அதில் ஒன்று இறந்துவிட்டது.

பிரபல பாலிவுட் நடிகை செலினா ஜெட்லி பீட்டர் ஹாக் என்பவரை திருமணம் செய்து கொண்டு துபாயில் வசித்து வருகிறார். செலினாவுக்கு முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தை பிறந்தது.

இரண்டுமே ஆண் குழந்தை. இந்நிலையில் இரண்டாவது முறை கர்ப்பமான செலினாவுக்கு கடந்த மாதம் 10ம் தேதி மீண்டும் இரட்டை குழந்தை பிறந்தது. இது குறித்து செலினா ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது,

தசரா

தசரா

தசரா நாள் அன்று எனது ரசிகர்கள், நண்பர்களுக்கு நல்ல-கெட்ட செய்தியை தெரிவித்துக் கொள்கிறோம். கடவுள் மீண்டும் எங்களுக்கு இரட்டை குழந்தைகளை கொடுத்து ஆசிர்வதித்துள்ளார்.

இரட்டையர்கள்

இரட்டையர்கள்

இரட்டை ஆண் குழந்தைகளுக்கு ஆர்தர் ஜெட்லி ஹாக், ஷம்ஷேர் ஜெட்லி ஹாக் என்று பெயர் வைத்துள்ளோம். அவர்கள் செப்டம்பர் 10ம் தேதி துபாயில் பிறந்தனர்.

ஷம்ஷேர்

ஷம்ஷேர்

வாழ்க்கை எப்பொழுதுமே நாம் திட்டமிட்டது போன்று நடப்பது இல்லை. எங்கள் மகன் ஷம்ஷேர் ஜெட்லி ஹாக் இதய பிரச்சனை காரணமாக இறந்துவிட்டான்.

தந்தை

தந்தை

என் தந்தை கடந்த 2 மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார். இந்நிலையில் ஷம்ஷேரும் சென்றுவிட்டான். ஆர்தரின் உருவில் ஷம்ஷேரை பார்க்கிறோம். ஆர்தருக்கு உங்களின் ஆசியும், ஆதரவும் தேவைப்படுகிறது என்று செலினா தெரிவித்துள்ளார்.

English summary
Bollywood actress Celina Jaitly has given birth to twin boys again in Dubai. But unfortunately, one of the boys succumbed to heart ailment.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil