For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கள்ளக் குடிச்சும் கிக்கு இல்லை.. கண்ணை மூடுனா கனவுல நீதானே... மாறிப் போன ஹீரோயின்கள்!

  By Soundharya
  |

  சென்னை: காலம் மாறிபோச்சு.. காலம் மாறும் போது திரைப்படங்களும் அதில் நடிக்கும் கதாப்பாத்திரங்கள் மட்டும் விதிவிலக்கல்ல. பழம்பெரும் நடிகர்கள் முதல் தற்போது இளவட்ட நடிகர்கள் வரை அனைவரும் ரசிகர்களை தங்கள் வசம் இழுக்க முயற்சிகள் செய்ய தவறவிட்டதில்லை.

  ஆனால், தற்போது அவர்களுக்கு நிகராக தற்போது பெண் கதாப்பாத்திரங்களும் தங்களை மையப்படுத்திய கதை, மற்றும் வித்தியாசமான கதாப்பாத்திரங்களை ஏற்க தயங்குவதில்லை.

  முன்னாடியெல்லாம் பெண்கள் அதாவது கதாநாயகி பயங்கரமா நடிக்கிறாங்கனா அது பேய் படமாத்தான் இருக்கும். ஆனா, இப்போ வரலாறு சம்பந்தப்பட்ட படங்கள், அதை விட ஆக்சன் படத்துலையும் களமிறங்கிடாங்க இப்போ இருக்குற நம்ம லேட்டஸ்ட் கதாநாயகிகள்..

  அந்த வகையில் அண்மையில் வெளியான மாயா திரைப்படத்தின் நாயகி நயன்தாரா திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். முன்னணி நடிகர்களுக்கு இணையாக இணையதளங்களில் பேசப்படுகிறார். அந்த வகையில் சில கதாநாயகிகள் அவர்களது வித்தியாசமான நடிப்பால் இன்றளவும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளனர். அந்த நாயகிகளை காண்போம்.

  சங்கீதா (பிதாமகன்) 2003 :

  சங்கீதா (பிதாமகன்) 2003 :

  வாய்ல ஒரு பக்கம் வெத்தைல போட்டுக்கிட்டு பையில கஞ்சா விக்கிற ஒரு பொண்ணு. அந்த பொண்ணுக்கும் காதல். அந்த பொண்ணு விக்கிறது கஞ்சாவா இருந்தாலும், படிக்கிற மாணவர்களுக்கு கொடுத்து கெடுக்காம இருப்பது அவரது பாலிசி. ஒரு அழகான கதையில் மைய கருவாக தன் நடிப்பை அவ்வளவு அழகாக பதித்திருந்தார் சங்கீதா.

  பிரியாமணி (பருத்திவீரன்) 2007 :

  பிரியாமணி (பருத்திவீரன்) 2007 :

  கள்ள குடிச்சும் கிக்கு இல்லை, கண்ண மூடுனா கனவுல நீதானே..! இந்த கிராமத்து காதல் கவிதை இன்றளவும் இளைஞர்கள் மத்தியில் மவுசு குறையாம இருக்கு. இந்த கவிதைக்கு சொந்தகாரியே நம்ம முத்தழகு பிரியமாணிதாங்க. முழுக்க முழுக்க தைரியமான பொண்ணாவே வந்து கலக்குவாங்க. இந்த
  முத்தழகுக்கு நடிப்பில மட்டுமில்ல நிஜத்திலும் கூட "தில்" சற்று அதிகம்தான்.

  பூஜா (நான் கடவுள்) 2007:

  பூஜா (நான் கடவுள்) 2007:

  ஒரு கண்ணு தெரியாத பொண்ணு பிச்சை எடுக்கும்போது அவள் என்னென்ன துன்பத்தை சந்திக்கின்றாள், அவள் தன் கற்பை காப்பாற்ற தன்னை கொன்று விடுங்கள் என கெஞ்சும் காட்சி, என்ன நடிப்புடா...? காண்பவர்கள் அனைவரையும் கண்கலங்க செய்யும்.

  அஞ்சலி (அங்காடித் தெரு) 2010 :

  அஞ்சலி (அங்காடித் தெரு) 2010 :

  அஞ்சலி மேக்கப் போடாம நடிச்ச முதல்படம். கிராமப்புறத்துல இருந்து நகரத்துக்கு வரவங்க படும் நரக வேதனைய அப்படியே காட்டுன படம் தான் அங்காடித் தெரு. பெரிய பெரிய கடைகளைப் பாத்தா அப்டி ஜொலிக்கும். ஆனா, அங்க வேலை பாக்குறவங்களோட உண்மையான நிலைமையையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்த கதை தான் அங்காடித் தெரு. அதுல இந்த பொண்ணு படுற பாடு இருக்கே..

  அமலா பால் (மைனா) 2010 :

  அமலா பால் (மைனா) 2010 :

  முழுக்க முழுக்க காதல் திரைப்படமா இருந்தாலும், சமூதாயத்த கண்ணாடி மாதிரி அப்டியே திரையில காண்பிச்ச திரைப்படம் தான் மைனா. அந்த மைனா பொண்ணு ஊரு, உறவை விட்டு தன்னோட காதலன் கூட வந்து சேர்ந்து வாழ முடியாம சிலபேரால கொலை செய்யப்படும்போது, அந்த பொண்ணு படுற பாடு
  இருக்கே, ப்ப்ப்பா..! கடைசில போலீசையும் அருவா தூக்க வச்சுட்டாங்களே...

  வேதிகா (பரதேசி) 2013 :

  வேதிகா (பரதேசி) 2013 :

  இதவிட யாராலையும் இந்த பொண்ண இவ்ளோ அழுக்கா காட்டமுடியாது. அந்த அளவுக்கு பரதேசி படத்துல இந்த பொண்ணும் பரதேசியாவே வந்துட்டு
  போயிருச்சு. என்ன நடிப்புடா.? கதை எந்த அளவுக்கு உயிரோட்டமா இருக்கோ அதைவிட அந்த கதைக்கு இவங்க நடிப்பு உணர்ச்சிய கொடுத்துருக்காங்க. பொண்ணு அழுக்கா இருந்த என்ன? அந்த பொண்ணு காட்டுற காதல் ரொம்ப அழகானது.

  அனுஷ்கா :

  அனுஷ்கா :

  இந்த பொண்ண என்னனு சொல்லறது? இன்னும் இந்த பொண்ணு நடிக்க வேற எதாவது வித்தியாசமான ரோல் இருக்கானு இயக்குனர் எல்லாம் தலைய பிச்சு யோசிக்கிறாங்களாம். அந்த அளவுக்கு இந்த பொண்ணு நடிச்சிருக்கு. அனுஷ்காவோட நடிப்புல அருந்ததி, இப்போ வந்த பாகுபலி இதெல்லாம் செம்ம நடிப்பு. ஹீரோக்களில் விக்ரம் தான் சினிமாக்கு அவ்ளோ உழைக்கிறார்னு நெனைச்சா அத விட பண்ணுதே இந்த அனுஷ்கா...! இஞ்சி இடுப்பழகிய தாங்க சொல்லறேன். ருத்ரமாதேவில எப்படியெல்லாம் சண்டை போடா போகுதோ.. இந்த பொண்ண இவங்க ரசிகர் லேடி சூப்பர் ஸ்டார்னு சொல்லறதுல தப்பே இல்ல.

  English summary
  Tamil cinema has seen a variety of actions and changeovers among the heroes. But nowadays heroines are rocking with their makeovers and improvised actions.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X