»   »  'லென்ஸை' எச்சரித்த சார்மி!

'லென்ஸை' எச்சரித்த சார்மி!

Subscribe to Oneindia Tamil
Charmi

பேட்டியின்போது தன்னை சகட்டுமேனிக்கு புகைப்படம் எடுத்ததால் ஆத்திரமடைந்த சார்மி, புகைப்படக்காரரின் கையில் இருந்த கேமராவை வேகமாக பிடுங்கினார். பின்னர் இனிமேல் புகைப்படம் எடுக்கக் கூடாது என்ற எச்சரிக்கையுடன் அதைத் திருப்பிக் கொடுத்தார்.

காதல் அழிவதில்லை மூலம் நடிகையான சார்மி ஓரிரு தமிழ்ப் படங்களில் நடித்து விட்டு தெலுங்கில் போய் செட்டிலாகி விட்டார். தற்போது தெலுங்கில் கவர்ச்சியான ரோல் என்றால் சார்மியைத்தான் கூப்பிடுகிறார்கள்.

தனி நாயகியாகவும், துணை நாயகியாகவும் கவர்ச்சிகரமாக நடித்துக் கொண்டிருக்கிறார் சார்மி. சமீபத்தில் ஹைதராபாத்தில் சர்வதேச திரைப்பட விழா பிரசாத் ஐமாக்ஸ் வளாகத்தில் நடந்தது.

அதில் சார்மி கலந்து கொண்டார். இயக்குநர் தேஜா உள்ளிட்ட பலரும் அதில் கலந்து கொண்டனர். அப்போது ஒரு புகைப்படக்காரர் சார்மியை மட்டும் அடிக்கடி தனது கேமராவால் கிளிக்கிக் கொண்டிருந்தார். காரணம், சார்மி அவ்வளவு 'அற்புதமாக' ஆடை அணிந்து அலங்காரமாக அமர்ந்திருந்ததே.

இதைப் பார்த்து கடுப்பான சார்மி, வேகமாக எழுந்து சென்று அந்த புகைப்படக்காரரின் கையில் இருந்த கேமராவைப் பிடுங்கினார். கோபத்துடன், இனிமேல் புகைப்படமே எடுக்கக் கூடாது என்று எச்சரித்து விட்டு பின்னர் கேமராவைத் திருப்பிக் கொடுத்தார். இதனால் அங்கு சில நிமிடம் பரபரப்பு நிலவியது.

இருந்தாலும் சார்மி சட்டென்று கூலானார். புகைப்படக்காரரும் அதன் பின்னர் சார்மி பக்கம் திரும்பிப் பார்க்கக் கூட இல்லை.

சார்மியின் அழகைப் பார்த்து கேமராவுக்கே டென்ஷனாகி விட்டது போலும்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil