»   »  சார்மிக்கு வந்த நேரம்

சார்மிக்கு வந்த நேரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

காதல் அழிவதில்லை படத்தில் சிம்புவுடன் ஜோடியாக அறிமுகமான பஞ்சாப் பசு சார்மி இப்போது தெலுங்குதிரையுலகில் மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்.

முன்னாள் டி.ராஜேந்தரான, இன்னாள் விஜய.டி.ராஜேந்தர் இயக்கிய காதல் அழிவதில்லையில் காட்டுத் தீயாய்கவர்ச்சி காட்டினார். சின்னப் பெண்ணாக இருந்தாலும் இவ்வளவு தீவிரமாக இருக்கிறாரே என்று கோடம்பாக்கத்துசினிமா ஆசாமிகள் வியந்ததோடு, வாய்ப்புக்களையும் தர முன் வந்தனர்.

ஆனால், அடுத்து இவர் நடித்து வெளிவந்த காதல் கிசு கிசு உள்ளிட்ட படங்கள் போணியாகாமல் போனதால்,இவரிடம் இருந்து கோடம்பாக்கம் விலகியது. கவலையில் இருந்த சார்மியை மலையாளத்துச் சேட்டன்கள் வந்துகூட்டிச் சென்றார்கள்.

அங்கு ஒரு மலைவாழ் பெண் ரோலைக் கொடுத்து, கவர்ச்சி என்ற பெயரில் டீப் ப்ரைடு சிக்கனுக்கு தோல்உரிப்பது மாதிரி ஆடைகளை உருவி நடிக்க வைத்தார்கள். அதிர்ந்து போன சார்மி, தன்னை அடுத்த ஷகீலாவாக்கமுயற்சி நடப்பதை உணர்ந்து சேட்டன்களுக்கு கும்பிடு போட்டுவிட்டு, அடுத்து எந்தப் படங்களிலும் கமிட்ஆகாமல் திரும்பி ஓடி வந்துவிட்டார்.

இதையடுத்து கோடம்பாக்கத்தில் கடும் தவம் புரிந்து ஆஹா எத்தனை அழகு என்ற படத்தில் வாய்ப்பைப்பெற்றார். படம் உருவாகும்போதே அதன் டைரக்டர் கண்மணிக்கும் சார்மிக்கு காதல் உருவாகிவிட, அதன்தயாரிப்பாளருக்கும் இன்னொரு ஹீரோயினாக நடித்த கன்னடத்துக்கு பாவ்னாவுக்கும் ஒரு இது உருவாகிவிட,சூட்டிங் கண்ட திசைகளில் போனது. இதனால் படம் வெளிவந்து பணால் ஆகிப் போனது.

காதலில் விழுந்துவிட்ட சார்மியிடம் ஜொள் விட முடியாது என இளவட்ட, முதுவட்ட நடிகர்கள் விலகிக் கொள்ளசான்ஸ் இல்லாமல் காய்ந்து போனார் சார்மி. படம் தோல்வியடைந்ததால், கண்மணியுடனான காதலும் முடிந்துபோனது.

இதையடுத்து தெலுங்குக்குப் போனார் சார்மி. முதலில் இவரைக் கண்டு கொள்ளாத அந்த ஊர் இயக்குனர்கள்இப்போது உச்சாணிக் கொம்பில் தூக்கிப் போய் வைத்துவிட்டார்கள். நாகர்ஜூனில் ஆரம்பித்து நிதின் வரைமுன்னணி நடிகர்களுடன் ஒரு ரவுண்டு நடித்து முடித்துவிட்டார்.

ஆஜானுபாகு தெலுங்கு நடிகர்களுக்கு சைஸ்ரீதியிலும் சார்மி பொறுத்தமாக இருப்பதால் அடுத்தடுத்துவாய்ப்புக்கள். கவர்ச்சியிலும் கொஞ்ச நஞ்சமல்ல, புகுந்து களை கட்டுகிறார் சார்மி.

கூச்ச நாச்சமில்லாமல் நடிப்பதால் ஏகப்பட்ட வாய்ப்புக்கள். லேட்டஸ்டாக விஜய் நடித்த திருமலை ரீமேக்கில்ஜோதிகா செய்த கேரக்டருக்கு சார்மி புக் செய்யப்பட்டிருக்கிறார்.

இது இப்படி இருக்க, ஆஹா எத்தனை அழகை இயக்கிய கண்மணியும் இப்போது தெலுங்கில் காலடி எடுத்துவைத்துள்ளா. தமிழில் மாதவனை வைத்து படம் எடுக்க இருந்த இவருக்கு கால்ஷீட் தராமல் மேடி இழுத்தடிக்க,படத்தையே டிராப் செய்துவிட்டு ஆந்திராவுக்குப் போய்விட்டார் கண்மணி.

சாமுராய் படத்தில் நடித்த அனிதா, புது ஹீரோ நவீன் ஆகியோரை வைத்து ஒரு படத்தை எடுக்கப் போகிறாராம்.

அப்படியே சார்மிக்கும் ஏதாவது சான்ஸ் தருகிறாரா பார்ப்போம் !

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil