»   »  மீண்டும் சார்மி.. சார்மி..!

மீண்டும் சார்மி.. சார்மி..!

Subscribe to Oneindia Tamil

அனுமான் படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார் நடிகை சார்மி.

காதல் அழிவதில்லை படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சார்மி. இவர் தமிழில் நடித்தது ஒன்றிரண்டு படங்கள் தான்.அவையும் சொல்லி வைத்தாற்போல் தயாரிப்பாளர்களின் தலையில் பெரிய துண்டைப் போட்டு மூடியதால் கோலிவுட்டை விட்டுவெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

மதமதப்பான உடம்புடன் ஹைதராபாத் போய் இறங்கியவரை தெலுங்கு சினிமா வாரியணைத்துக் கொண்டது. நடிக்கவே வேண்டாம்;டிரஸ் விஷயத்தில் மாத்திரம் ஏவாளுக்கு தங்கச்சி போல் வந்தால் போதும் என்ற தெலுங்கு பட சூத்திரம் சார்மிக்கு மிகவும் கை கொடுத்தது.

அப்படியே நான்கைந்து தெலுங்கு படங்கள் நடித்து முடித்தார். இவரது தாராள சேவை மாநில எல்லைகளைத் தாண்டி தமிழகத்தில் பரவ,தமிழ்ப் படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு வந்துள்ளது.

அனுமான் என்ற படத்தில் அர்ஜூனுக்கு ஜோடியாக வேஷம் கட்டுகிறார். படத்தில் பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், நித்தின், ராஜலட்சுமிஉள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

படத்தின் கதை என்னவென்றால், காவிரி டெல்டா பகுதியில் பிரகாஷ்ராஜ் ஒரு அணை கட்ட முயற்சிக்கிறார். அதை வில்லன் கோஷ்டி தடுக்கமுயல்வதோடு, அவரைக் கொல்லவும் திட்டம் போடுகிறது. வில்லன் கோஷ்டியை அர்ஜூன் எப்படி வதம் செய்கிறார் என்பது மீதிக்கதை.

கதை, திரைக்கதை எழுதி படத்தை இயக்கப்போவது ரம்யா கிருஷ்ணனின் கணவர் கிருஷ்ணவம்சி. மணிசர்மா இசையமைக்கிறார்.

சூட்டிங்கை வேகமாக முடித்து விரைவில் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். சூட்டிற்காக சென்னை வந்துள்ள சார்மியை மடக்கி,தமிழ் ரசிகர்களுக்கு இப்படி ஓரவஞ்சனை செய்துவிட்டீர்களே என்று கேட்டபோது,


நான் என்ன செய்ய? தமிழில் எனக்கு வந்த கேரக்டர்கள் எல்லாமே குடும்பப்பாங்கானவை. தெலுங்கில் கதைக்குத் தேவைப்பட்டால்கவர்ச்சி காட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதே நேரத்தில் ஆபாசமாக நான் நடிக்கவில்லை என்று டி.ஆர். ராஜாகுமாரி காலத்துடயலாக்கை சொல்லி முடித்தார்.

தெலுங்கில் காட்டிய கவர்ச்சிக்கு இணையாக அனுமானில் காட்ட சார்மி முடிவெடுத்துள்ளாராம்.

ஹே ராம்!!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil