»   »  தெலுங்கை கலக்கும் சார்மி

தெலுங்கை கலக்கும் சார்மி

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழில் அறிமுகமான சார்மி இப்போது ஆந்திராவில் ஹாட் கேக்.

சிம்புவுடன் காதல் அழிவதில்லை தமிழில் அறிமுகமாகிய சார்மிக்கு இங்கே அதிக வாய்ப்புகள் வரவில்லை. மனம் தளராத இந்த பஞ்சாப்சிங்கி (சிங்கத்தின் பெண் பால் பெயர்) தெலுங்குக்குத் தாவினார்.

அங்கே நடிக்க வந்தேன் என்று ஹீரோயின் சொன்னால் சிரிப்பார்கள் என்பதால், அப்படியெல்லாம் சொல்லாமல் பிலிம் ரோல்களை பத்தவைக்க வந்த விவரத்தைச் சொல்லி சான்ஸ் கேட்டார்.

எடுத்தவுடன் இளம் நடிகர்களுக்கு வலைவீசாமல் ஓல்டு- போல்டு, விக் ஆசாமிகளுக்கு வலை வீசினார். இவரது வலையில்பாலகிருஷ்ணாவில் ஆரம்பித்து பல பழைய பார்ட்டிகள் மாட்டவே, அவர்களுடன் அசராமல் ஆடிக் கலக்கினார்.

சின்னப் பொண்ணு என்பதால் வாயெல்லாம் (ஒட்டு) பல்லுடன் மகிழ்ச்சிடன் பல பெரிசுகள்" ஜோடி சேர, தெலுங்கில் முன்னணிக்குவந்துவிட்டார் சார்மி. அடுத்த ரவுண்டில் இளம் நடிகர்களுடன் சேர்ந்து நடித்தார்.

இப்படியாக தெலுங்கில் அனைத்து முன்னணி, பின்னணி (நம்ம கார்த்திக், ராம்கி மாதிரியான மார்க்கெட் போனவர்கள்) நடிகர்களுடன்நடித்து இப்போது தெலுங்கில் ரொம்ப பிஸியான நடிகையாக இருக்கிறார் சார்மி.

கிளாமர் காட்ட வசதியாக உடம்பையும் கண்டமேனிக்கு தேத்தி வைத்திருக்கிறார். கதையம்சத்தை விட சதையம்சத்துக்கே தெலுங்கில் மவுசுஎன்பதால் உடலை ஊட்டம் போட்டு உரமேற்றி வைத்திருக்கிறார்.

சமீபத்தில் நடித்த அனுமன், சக்ரம் ஆகிய இரு படங்களிலும் கவர்ச்சியில் எல்லை தாண்டி பயங்கரவாதம் காட்டிவிட்டாராம் சார்மி.

இரண்டுமே சூப்பர் ஹிட். இதில், சக்ரம் படத்தின் ஹீரோயின் ஆசின். ஆனால் அதிகம் பேசப்பட்டது ஷார்மி தான். இதனால் மேலும் பலவாய்ப்புகளில் மூழ்கிப் போயிருக்கிறார்.

தமிழில் அர்ஜூனுடன் அனுமன் என்ற ஒரு படத்தில் நடிக்கப் போகும் சார்மிக்கு, இப்போதைக்கு வேறு மொழிப் படங்களில் நடிக்கஆர்வமே இல்லையாம். முழு கவனமும் தெலுங்கில் தானாம். பஞ்சாபியான இவர் இப்போது தெலுங்கும் பேசக் கற்றுக் கொண்டுவிட்டார்என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

(தமிழுக்கு வரும் நடிகைகள் தான் (குஷ்பு போன்ற சில விதிவிலக்குகள் தவிர) ஆடி, பாடி, துட்டு சேர்த்து, ஓய்ந்து, ஊருக்குப் போகும் வரைதமிழை கற்றகவும் மாட்டார்கள். அதைப் பற்றி சினிமாக்காரர்களும் கவலைப்படவும் மாட்டார்கள்.)

தமிழில் அறிமுகமாகி வாய்ப்பில்லாமல் இருந்தபோது கேரளாவில் ஒரு படத்தில் நடித்தார் சார்மி. அதற்கு சேட்டன்டன் அள்ளி கொடுத்தசம்பளத்தை இன்னும் மறக்கவில்லையாம் சார்மி. இதனால் தான் மலையாளத்தில் இருந்து வந்த பல சான்ஸ்களுக்கு பெரிய கும்பிடுபோட்டுவிட்டார்.

தெலுங்கில் ஆட்டம் குளோஸ் ஆனால், தமிழில் முயன்று பார்த்துவிட்டு கன்னடம் பக்கமாவது போவேனே தவிர மலையாளத்துப் பக்கம்தலை வைத்துக் கூட படுக்க மாட்டேன் என்கிறார்.

அப்படி என்னதான் சம்பளம் தந்தீங்கப்பா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil