»   »  சாயாவின் தயக்கம்!

சாயாவின் தயக்கம்!

Subscribe to Oneindia Tamil

தனுஷ் படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்ததால் சந்தோஷமடைந்த சாயா சிங், அவருக்கு ஜோடியாக இல்லை என்று தெரிந்தவுடன் அப்செட் ஆகி விட்டாராம்.

தனுஷின் அண்ணாத்தை செல்வராகவன் தெலுங்கில் இயக்கி வரும் படம் அடவரி மடலகு அர்த்தலு வெருல.

வெங்கடேஷ், ஸ்ரீகாந்த், திரிஷா நடிக்க இப்படம் உருவாகி வருகிறது.

இந்தப் படத்தை அப்படியே தமிழிலும் ரீமேக் செய்கிறார் செல்வா. தனுஷ்தான் நாயகன், ஜோடி போட்டிருப்பவர் நயனதாரா.

செல்வாவின் உதவியாளர் ஜவகர்தான் இயக்குகிறார். படத்தின் பெயர் யாரடி நீ மோகினி.

இப்படத்தில் தனுஷ், நயனதாரா ஜோடி தவிர இன்னொரு ஜோடியும் உண்டாம். அதற்காக கண்ட நாள் முதல் ஹீரோ பிரசன்னாவிடம் கால்ஷீட் கேட்டுள்ளனர். ஆனால் படு டைட்டா இருக்கேன ராசா, முடியாதே என்று கூறி விட்டாராம் பிரசன்னா.

இதனால் அவரை விட்டு விட்டு இப்போது, அதே கண்டநாள் முதல் படத்தில் நடித்த கார்த்திக்கை பிடித்தனர். அவரும் நடிக்க ஓ.கே சொல்லி விட்டாராம்.

இதையடுத்து அவருக்கான ஜோடி குறித்து யோசித்துள்ளனர். அப்போதுதான் தனுஷ், நம்ம சாயா சிங்கைப் போடலாமே என்று ரெக்கமண்ட் செய்துள்ளார்.

இதையடுத்து சாயாசிங்கை அணுகி, வர்ரீங்களாம்மா என்று கேட்டுள்ளனர். தனுஷ் படம் என்றவுடன் சந்தோஷமான சாயா, அவருக்கு ஜோடி இல்லை, கார்த்திக்குக்குத்தான் ஜோடி என்று தெரிந்தவுடன் அப்செட் ஆகி விட்டாராம்.

திருடா திருடியில் தனுஷுடன் ஜோடி போட்டு கலக்கியவர் சாயா. அதன் பின்னர் தமிழ் சினிமாவை அவரைப் பார்த்து போயா என்று கூறி விட்டது. இதனால் ஏமாற்றமாக, ஏக்கமாக இருந்தவர் சாயா. அப்படிப்பட்டவருக்கு தனுஷ் படம் என்றவுடன் ஜாலியாகிப் போனது.

இருந்தாலும் அவருக்கு ஜோடி இல்லை என்பதால் நடிக்கலாமா, வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.

சீக்கிரம் பதிலைச் சொன்னால் நல்லாருக்கும் என்று இயக்குநர் ஜவகர் தரப்பிலிருந்து ஓலை போயுள்ளதால் தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.

அனேகமாக பச்சைக் கொடி காட்டி விடுவார் என்று கூறப்படுகிறது.

படத்தில் மன்மதா ராசா ரீமிக்ஸை வச்சுக்கிட்டாப் போச்சு!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil