»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

அதிகம் படங்களில் நடிக்காமலேயே பெரும் தொகையை தேத்தி வைத்துள்ளர் சாயாசிங். அதனை தனது சொந்தஊரான பெங்களூரில் சொத்துக்களாக மாற்றி வருகிறார்.

முதல் படத்தில் நடிக்கும்போது எந்த நடிகைக்கும் பெரிய சம்பளம் கிடைக்காது. அதுபோலத்தான்சாயாசிங்குக்கும். திருடா திருடா படம் ஹிட் ஆகியும் அதில் நடித்த சாயாசிங்குக்கு சம்பளம் என ஒரு பெரியதொகை எதுவும் வழங்கப்படவில்லை.

பின்பு கவிதை படத்தில் நடித்த போது ரூ. 10 லட்சம் கேட்டார் சாயா. மன்மத ராசா பாடலுக்கு நான் போட்டஆட்டம் தான் திருடா திருடி படத்தின் வெற்றிக்கே காரணம் என்று சொல்லி, அவ்வளவு பெரும்தொகையைக் கேட்டார். ஆனால், சாயா கேட்டதில் பாதியைக் கொடுத்து கால்ஷீட்டைவாங்கிவிட்டார் தயாரிப்பாளர்.

இதற்கிடையே சிம்ரன் பாணியில் அருள் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார். படம் முக்காடு போட்டுமூடிக்கொண்டதில் இவரது ஆட்டம் அவ்வளவாக பேசப்படவில்லை.

இப்போது இவரிடம் ஜெயசூர்யா மற்றும் அப்பா அம்மா செல்லம் என்ற இரு படங்கள் மட்டுமே கைவசம்உள்ளன. ஜெயசூர்யாவில் அர்ஜூனுக்கு ஜோடியாக இரு கதாநாயகிகளில் ஒருவராக லைலாவுடன் நடிக்கிறார்.அப்பா அம்மா செல்லம் பட வாய்ப்பை சாயாசிங்கே வலியப் போய் கேட்டு வாங்கினார்.

வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் மன்மத ராணியிடம் பணப் புழக்கத்துக்கு குறைவேயில்லை. கையில் கோடிகள்புரள்கின்றன. இந்த பெரும் பணம் சாயா நடிக்காமல் சம்பாதித்தது என்கிறார்கள்.

நடிக்காமல் என்றதும் தப்பாக எதுவும் கற்பனை செய்து கொள்ளவேண்டாம். பிறகு எப்படி காசு வந்தது என்றுகேட்கிறீர்களா? எல்லாம் மன்மத ராசா பாடலுக்கு ஆட்டம் போட்டுத்தான்.

இந்தப் பாடலால் ஓடிய திருடா திருடி படத்தின் மூலம் தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த்துக்குக் கிடைத்த லாபம்சுமார் ரூ. 7 கோடி. அதேபோல சாயாசிங்குக்கும் இந்தப் பாடல் பணத்தைக் கொட்டிக் கொண்டிருக்கிறது.

இதுவரை அந்தப் பாடலை ஏறக்குறைய 400க்கும் அதிகமான உள்நாட்டு, வெளிநாட்டு கலை நிகழ்ச்சிகளில்ஆடியிருக்கிறாராம் சாயா.

வெளிநாட்டு மேடைகளில் ஆட ரூ. 3 லட்சமும் உள்நாட்டில் ஆட ரூ. 1 லட்சமும் வசூலிக்கிறார் சாயா. இப்படிமன்மத ராசாவுக்கு ஆட்டம் போட்டே பல கோடிகளைப் பார்த்துவிட்டார் சாயா.

இன்னும் கூட சாயாவுக்கு ஆட வாய்ப்புக்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றன. ஆனால், அதற்கு விஜயகாந்த்மூலம் ஆப்பு விழுந்துவிட்டது. நடிகர் சங்கத்தின் பொன்விழா வரை, திரையுலகினர் யாரும் கலைநிகழ்ச்சிகளில்கலந்து கொள்ளக் கூடாது என்று விஜயகாந்த் உத்தரவு போட்டுவிட்டார்.

இதனால் பணம் வரும் பாதை அடைபட்டு விட்டதே என்ற வருத்ததில் இருக்கிறார் சாயா.

ஒரு வால்துண்டு (அதாங்க டெயில்பீஸ்): அம்மா அப்பா செல்லம் படத்துக்காக சாயாசிங் வாங்கியுள்ள சம்பளம்ரூ.8 லட்சமாம்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil