»   »  வெடிக்கும் பாப்கார்ன்... சாயாசிங்

வெடிக்கும் பாப்கார்ன்... சாயாசிங்

Posted By:
Subscribe to Oneindia Tamil

என்னமோ தேய்ந்து கட்டெறும்பு ஆனது என்பார்களே; அந்தக் கதைதான் சாயாசிங்குடைய கதை.

திருடா திருடி படத்தில் தனுஷுடன் அட்டகாசமாக அறிமுகமானவர் இப்போது விவேக்குக்கு ஜோடியாக நடித்துக்கொண்டிருக்கிறார். என்ன இப்படி ஆகிப் போச்சே.. பாவம் என்றோம்.

சூடான மெஷினில் இருந்து வெடித்தபடியே வந்துவிழும் பாப்கார்ன் மாதிரி வார்த்தைகளை கோபம் மற்றும் காரத்துடன்கொட்டினார் சாயா. அவர் சொன்னது:

விவேக்கிற்கு ஜோடியாக நடிப்பதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. கதாநாயகியுடன் டூயட் பாடி, சண்டை போட்டுநடிச்சாத்தான் ஹீரோவா? நல்ல கேரக்டரில் யார் நடித்தாலும் அவர்தான் ஹீரோ.

அதுமட்டுமில்லை, இப்ப எல்லோரையும் அண்ணாந்து பார்க்க வைச்சிருக்கிற விக்ரம் சார் ஒரு காலத்தில் எவ்வளவுகஷ்டப்பட்டார். இப்போ அவர் முன்னுக்கு வந்துவிடவில்லையா? என்று லேசாக மூச்சுவிட்டவர் தொடர்ந்து,

எல்லோரையும் அசர வைச்சிருக்கும் விக்ரம் சாருக்கும் கடந்தகால வாழ்க்கை இருக்கு. அவர் கடினமாக உழைச்சுஎல்லாவற்றையும் தாண்டி முன்னுக்கு வரலையா? அதே மாதிரி விவேக்கும் பெரிய ஹீரோவாக வர வாய்ப்பிருக்கிறது என்றார்.

கொஞ்சம் தம் பிடித்துக் கொண்டு தொடர்ந்து பேசிய சாயா, அதுவுமில்லாமல் எனக்கு கேரக்டர்தான் முக்கியமே தவிர, யார்ஹீரோ என்பது முக்கியமில்லை. திருடா திருடியில் எப்படிப்பட்ட கேரக்டரில் நடித்தேனோ அதேபோன்ற ஒரு கேரக்டர் இந்தப்படத்தில் அமைந்துள்ளது. படபடவென பொரிந்து தள்ளுகிற பெண்ணாக வருகிறேன் என்று அடுக்கித் தள்ளினார்.

விளம்பரத்துல நடிக்கவும், ஒரு பாட்டுக்கு ஆட்ற மாதிரியும் நிலைமை வந்துருச்சே... பாவம் என்று மீண்டும் அவரிடம் ஒருகேள்விப் போட்டுவிட்டு, டேப்பை ஆன் செய்தோம்.

அசரவில்லை சாயா. படபடவென பொறிந்தபடியே அவர் சொன்னது:

நல்ல இயக்குநர் மற்றும் பெரிய பேனர் படம் என்றால் மட்டுமே ஒரு பாடலுக்கு ஆட ஒத்துக் கொள்கிறேன். எல்லாவாய்ப்புகளையும் ஒப்புக் கொள்வதில்லை. மேலும் மார்க்கெட் இல்லாததால் தான் ஒரு பாடலுக்கு ஆட ஒத்துக் கொண்டேன்என்பதும் பொய்.

எனக்கு நம்பர் ஒன் விஷயத்தில் நம்பிக்கை கிடையாது. யார் மீதும் எனக்கு பொறாமை கிடையாது. எனக்குன்னு ஒரு இமேஜ்இருக்கிறது. நான் சிம்ரனாகவே த்ரிஷாவாகவோ மாற முடியாது. அதுமாதிரி வேறு யாரும் சாயாவாக முடியாது.

படங்களில் நல்ல கேரக்டர் கிடைத்தால் யார் வேண்டுமானால் பெரிய அளவில் வரலாம். பத்மினி, சாவித்திரி, சரிதா, சிம்ரன்,ஜோதிகா எயல்லாம் அப்படித்தான் முன்னுக்கு வந்திருக்காங்க என்றவர் தொடர்ந்து,

சினிமாவில் எனக்குப் பிடிக்காத விஷயம் முகத்திற்கு ஒரு மாதிரியும், முதுகுக்குப் பின்னாடி ஒரு மாதிரியும் பேசுவதுதான்.என்னைப் பற்றி வரும் கிசுகிசுக்கள் உண்மையாக இருந்தால், அதை கண்டுக்க மாட்டேன். தப்பாக இருந்தால் அதை எழுதினஆளை அடிக்கணும்போல ஆத்திரம் வரும் என்றபோது நிஜமாகவே சாயாவின் முகம் ரோஸ் பெளடர் பூசாமலேயேசிவந்திருந்தது...

அதற்கு மேல் கேள்வி கேட்க நமக்கு தைரியம் வரவில்லை. விட்டோம் ஜூட்...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil