»   »  பட்டினப்பாக்கத்தில் பாலிவுட் நாயகியான சாயாசிங்

பட்டினப்பாக்கத்தில் பாலிவுட் நாயகியான சாயாசிங்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பட்டினப்பாக்கம் படத்தில் பாலிவுட் நடிகையாக நடிக்கிறார் மன்மதராசா புகழ் சாயாசிங். மெட்ராஸ் பட கலையரசன் ஹிரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் நடிகையாக இருந்து குடும்பப் பெண்ணாக மாறும் கதாப்பாத்திரத்திரமாம்.

தனுஷ் நடித்த 'திருடா திருடி' படத்தில் மன்மத ராசா பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் சாயாசிங். விக்ரம், விஜய் படங்களில் ஒற்றை பாடலுக்கு ஆடினாலும், சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்து வந்தார்.

தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துவந்த சாயாசிங், ஆனந்தபுரத்து வீடு படத்தில் நடித்த போது தன்னுடன் நடத்த கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் நடிப்பை விட்டு இல்லத்தரசியாக மாறிய சாயாசிங், தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

உதயநிதியின் அக்கா

உதயநிதியின் அக்கா

உதயநிதி நடித்த கதிர்வேலன் காதல் படத்தில் அக்காவாக நடித்தார். தற்போது பட்டினப்பாக்கம் படத்தில் பாலிவுட் நடிகையாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலிவுட் நடிகை

பாலிவுட் நடிகை

இயக்குனர் ஜெயதேவ் இயக்கவிருக்கும் பட்டினப்பாக்கம் படத்தில் பாலிவுட் நடிகையாக, மலையாள நடிகர் மனோஜ் கே. ஜெயனுக்கு ஜோடியாக நடிக்கிறார் சாயாசிங்.

திருமணத்திற்குப் பின்னர்

திருமணத்திற்குப் பின்னர்

தனது கதாப்பாத்திரம் குறித்து பேசிய சாயாசிங்,'மிகவும் உணர்வுபூர்வமான கதாப்பாத்திரம். எனது திருமணத்திற்கு பிறகு நண்பராக பழகிய ஒருவரிடம் இருந்து நான் எப்படி தப்பிக்கிறேன் என்பது தான் இதன் கதை என்று கூறியுள்ளார்.

கலையரசன் நடிப்பு

கலையரசன் நடிப்பு

இப்படத்தில் கலையரசன் தனது அம்மாவை பார்த்துக் கொள்பவராக நடிக்கிறார். 'இயல்பாகவே உணர்ச்சிமிகுந்த காட்சிகளில் நடிக்கிறார் கலையரசன். சிறந்த நடிகர் அவரது நடிப்பை பார்க்கவே ஆர்வமாக உள்ளது' என கூறியுள்ளார் சாயாசிங்.

பட்டினப்பாக்கம்

பட்டினப்பாக்கம்

முல்லை மோதில், புரொடெக்ஷன்ஸ் தயாரிக்கும் பட்டினப்பாக்கம் படத்தில் கலையரசன், அனுஷ்வரா குமார், சார்லி, மனோஜ் கே ஜெயின், யோக் ஜேப்பி, சாயாசிங், ஜான் விஜய், மதுமிதா, எம்.எஸ்.பாஸ்கர், மதன்பாபு, ரேகா சுரேஷ், ரோசின், ஆசிப் ஷேக் ஆகியோர் நடிக்கிறார்கள்.

English summary
Chaya Singh plays an actress-turned-home maker in the film Pattinapakkam, which has Kalaiyarasan in the lead. She will be seen as a Tamil girl who has carved a niche in Bollywood, who quits acting post marriage.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil