»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

திருடா திருடி படம் கேரளத்திலும் படு ஹிட் ஆகிவிட்டது.

இதனால் சாயா சிங்குக்கு அங்கும் பல வாய்ப்புக்கள்குவிந்துள்ளன.

ஆனால், மலையாளத்தில் சாயா சிங் பெயர் சரியாக வராது என்று பலரும் சொன்னதால் அங்கு தனது பெயரைமின்னு என்று மாற்றிக் கொண்டுள்ளார்.

மன்மத ராசா பாட்டைத் தொடர்ந்து தமிழில் தொடர்ந்து உட்டாலங்கடி டான்ஸ் பாடல்களுடன் கூடிய படங்களில்நடிக்கவே கூப்பிட, வெறுத்துப் போய் பல சான்ஸ்களை ஒதுக்கினார்.

வளர வேண்டிய காலத்தில் சான்ஸ்களைஒதுக்கலாமோ என்று வேண்டியவர்கள் பலரும் யோசனை சொன்னதால் இப்போது விட்ட வாய்ப்புக்களை எல்லாம்மீண்டும் கேட்டு வாங்க ஆரம்பித்துள்ளார் சாயா.

ஆனால், இப்போது இன்னொரு பிரச்சனை முளைத்திருக்கிறது.

முதலில் கன்னடத்தில் நடித்துத் தான் தமிழுக்குவந்தார் சாயா.

தமிழ் சான்ஸ் கிடைத்ததால் கன்னடத்தில் பல படங்களை அப்படியே அந்தரத்தில் விட்டுவிட்டுஓடிவந்தார்.

இப்போது கன்னட தயாரிப்பாளர்கள் எல்லோருமே வரிந்து கட்டிக் கொண்டு நிற்பதால், முதலில் கன்னடப்படங்களை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

மலையாளத்தில் மீரா ஜாஸ்மீனுக்கு போக இருந்த பல சான்ஸ்களும், அவர் தமிழிலி பிஸியாகிவிட்டதால்,சாயாவைத் தேடி, ஸாரி மின்னுவைத் தேடி வர ஆரம்பித்துள்ளன.

பணம் கொட்டும் தமிழ், பெயர் கிடைக்கச் செய்யும் மலையாளம் என நல்ல பட சான்ஸ்கள் வரும் வேளையில்கன்னடப் படங்களில் மாட்டிக் கொண்டு விழி பிதுங்கிக் கொண்டிருக்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil