»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

அர்ஜூனா என்ற படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடிக்கிறார் மன்மத ராணி சாயாசிங்.

பகைவன், தேவராகம், புதிய கீதை போன்ற மெகா தோல்விப் படங்களை தயாரித்தவர் விஸ்வாஸ் வி.சுந்தர்.இவர் இப்போது இரண்டு படங்களைத் தயாரித்து வருகிறார்.

ஆட்டோகிராஃப் படத்தில் கிடைத்த பாராட்டுகளுக்கு அடுத்து, வித்தியாசமான வேடங்களில் நடிப்பதில் ஆர்வம்காட்டி வரும் ஸ்னேகா இப்போது விஸ்வாஸ் தயாரிப்பில் அது என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது. இதில்பார்வையற்ற பெண்ணாக ஸ்னேகா நடிக்கிறார். இது ஒரு திகில் படம்.

இதையடுத்து சரத்குமாரை வைத்து பல கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக அர்ஜூனா என்ற படத்தைஎடுக்கிறார். சரத்குமாருக்கு ஜோடியாக இந்தப் படத்தில் நடிப்பவர் சாயாசிங் (சரத்குமார்!.. உங்களுக்கே இதுஓவரா தெரியலை?).

சாயாசிங் தவிர படத்தில் சரத்குமாருக்கு இன்னொரு ஜோடியும் உண்டு. அதற்கான கதாநாயகி தேர்வு நடந்துவருகிறது. சலீல் கெளஸ், விருமாண்டி சண்முகராஜன் (இன்ஸ்பெக்டர் பேய்க்காமன் கேரக்டரில் வந்தவர்) மற்றும்பலர் நடிக்கிறார்கள்.

மன்மத ராசா என்ற ஹிட் பாடலைக் கொடுத்த தினா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். கதை, திரைக்கதை,எழுதி இயக்குபவர் விஜய்வாணன். படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது.

சாயாசிங் கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என்று அடம் பிடிப்பதில்லை. காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்றதமிழ் பழமொழியை அறிந்தவர் போலும். ஒரு பாடலுக்கு ஆட்டம் என்றாலும், துட்டு கிடைத்தால் சரி என்று ஒத்துக்கொண்டு ஆட வந்து விடுகிறாராம்.

இப்போது ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் அருள் படத்தில் ஒரு டப்பாங்குத்து பாடலுக்கு சரி ஆட்டம்போட்டுள்ளார். உக்கடத்து பப்படமே சுற்றிவிட்ட பம்பரமே... என்ற பாடலுக்கு விக்ரமுடன் இணைந்து சாயாசிங்போட்ட ஆட்டத்தைப் பார்த்து படக்குழுவே ஆடிப் போயுள்ளதாம்.

காரைக்குடியில் இந்த பாடல் 50க்கும் மேற்பட்ட நடன கலைஞர்களை வைத்து 5 நாட்கள் படமாக்கப்பட்டது.தினமும் 6 மணி நேரம் என்று சாயாசிங் சளைக்காமல் ஆடினாராம். இதற்கு சம்பளமாக சுளையாக ரூ. 5 லட்சத்தைவாங்கிவிட்டாராம் சாயா.

இதே போல ஹீரோயின் ரோலோ, சிங்கிள் டான்ஸோ எதற்கும் அணுகலாம் என்று போர்டு மாட்டாத குறையாககோடம்பாக்கம் மற்றும் கன்னடத்தில் தொடர்ந்து சான்ஸ் வேட்டை நடத்திக் கொண்டே இருக்கிறார் சாயா.இதனால் கையில் ஏதாவது ஒரு வாய்ப்பை தக்க வைத்தபடியே இருக்கிறார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil