»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாலாவுக்கு ஜோடியாக அம்மா அப்பா செல்லம் என்ற படத்தில் நடிக்கிறார் சாயாசிங்

தனக்கு உயிர் கொடுத்து சீராட்டி பாராட்டி வளர்த்த அப்பா அம்மாவை உயர்ந்த இடத்தில் வைத்து சந்தோஷப்படவேண்டும் என்று நினைக்கும் ஒரு இளைஞனின் கதைதான் அம்மா அப்பா செல்லம். அந்த வித்தியாசமானஇளைஞனாக, அன்பு, காதல் கிசுகிசு படங்களின் கதாநாயகன் பாலா நடிக்கிறார்.

கட்டுமஸ்தான உடம்பு, கராத்தே, டான்ஸ் பயிற்சி என கதாநாயனுக்குத் தேவையான விஷயங்களுடன்கோலிவுட்டில் நுழைந்தார். ஆனால், அறிமுகம் சரியாக அமையவில்லை. வாய்ப்புகள் இல்லாமல் இருந்தவருக்குஅம்மா அப்பா செல்லம் படம் கிடைத்துள்ளது.

இந்தப் படம் தனக்கு ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் பாலா. இந்தப் படத்தில்அவருக்கு ஜோடி சாயாசிங்.

நானும் அம்மா அப்பா செல்லம்தான் என்கிறார் சாயாசிங். முதலில் சினிமாவில் நடிப்பதற்கே எங்கள் வீட்டில்அனுமதிக்கவில்லை. பிறகு அஸிது அடம் பிடித்ததால் சரி என்றார்கள்.

மன்மதராசா பாட்டுக்கு நான் ஆடிய ஆட்டத்தைப் பார்த்து என்னுடைய அம்மா, அப்பாவே ஆடிப் போய்விட்டார்கள் என்று கூறுகிறார்.

திருடா திருடி படம் ஹிட் ஆனதும் ஒரு பெரிய ரவுண்ட் வரலாம் என்று எதிர்பார்த்திருந்த சாயா சிங்குக்குவாய்ப்புகள் அவ்வளவு பிரகாசமாக இல்லை. டி.வி. சீரியல் கதாநாயகி போல அவரது தோற்றம் இருப்பதால்ரசிகர்களிடம் வரவேற்பு இல்லை. ஜோதிகாவை இமிடேட் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு வேறு.

அம்மா அப்பா செல்லம் தவிர, ஜெயசூர்யா படத்தில் அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அந்தப் படத்தில்இன்னொரு கதாநாயகியாக லைலா நடிக்கிறார். அர்ஜூன் படம் எப்போதும் ஊத்தலுக்குப் பேர் போனதுஎன்பதால் சாயாசிங், அம்மா அப்பா செல்லம் படத்தைத்தான் பெரிதும் நம்பியிருக்கிறார்.

பரத்வாஜ் இசையில் அறிமுக இயக்குனர் சூரியன் கைவண்ணத்தில் உருவாகி வரும் இந்தப் படம் ஆகஸ்டு மாதம்திரைக்கு வருகிறது.

இதற்கிடையே வந்த வாய்ப்பை ஏன் விட வேண்டும் என்று, அருள் படத்தில் விக்ரமுடன் ஒரு பாடலுக்குடப்பாங்குத்து டான்ஸ் ஆடியுள்ளார் சாயாசிங்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil