»   »  சென்னை தோசைன்னா அனுஷ்காவுக்கு கொள்ளை ஆசை!

சென்னை தோசைன்னா அனுஷ்காவுக்கு கொள்ளை ஆசை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாகுபலியின் நாயகி நடிகை அனுஷ்காவிற்கு சென்னையில் மிகவும் பிடித்த உணவு தோசைதானாம்.

தெலுங்கு மற்றும் தமிழில் முன்னணி நடிகையாக விளங்கும் நடிகை அனுஷ்கா தற்போது மாபெரும் சரித்திரப் படங்களான ருத்ரமாதேவி, பாகுபலி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களுமே அனுஷ்காவிற்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப் பட்டிருக்கின்றன.

தனது உடலை ஆரோக்கியமாகவும், கட்டுக் கோப்பாகவும் வைத்துக் கொள்வதற்காக அனுஷ்கா தனது உணவு மற்றும் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறார். சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு இவர் ஒரு யோகா டிரெய்னராக இருந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

பழமொழிப் ப்ரியை

பழமொழிப் ப்ரியை

அனுஷ்காவுக்கு மனது கஷ்டமாக இருக்கும் போதெல்லாம் நிறைய பழமொழிகள் அவற்றில் வரும் மேற்கோள்களை படிப்பாராம், இது அவரது மனதிற்கு மிகுந்த புத்துணர்ச்சியைத் தருமாம்.

தனிமை விரும்பி

தனிமை விரும்பி

அனுஷ்கா ஒரு தனிமை விரும்பியும் கூட. நாள் முழுவதும் தனிமையில் இருக்கச் சொன்னால் கூட எனக்கு சந்தோஷம்தான் என்கிறார்.

ஆரோக்கிய ரகசியம்

ஆரோக்கிய ரகசியம்

'தினசரி காலை 40 நிமிடங்கள் யோகா செய்வது, இரவு 8 மணிக்குள் இரவு உணவை முடித்து விடுவது போன்றவைதான் என்னை இப்படி வைத்திருக்கின்றன', என தனது ஆரோக்கிய ரகசியம் சொல்கிறார்.

அசைவம் சமைக்கப் பிடிக்கும்

அசைவம் சமைக்கப் பிடிக்கும்

சைவ உணவை விரும்பிச் சாப்பிடும் அனுஷ்காவிற்கு, அசைவ உணவு சமைப்பது ரொம்பப் பிடிக்குமாம். "நேரம் கிடைக்கும்போதெல்லாம் பெங்களூர் சென்று விடுவேன், அங்கு நான் சொந்தமாக நடத்தி வரும் ரெஸ்ட்ராரெண்டிற்கு சென்று அதனை கவனிக்க ஆரம்பித்து விடுவேன்," என்கிறார்.

English summary
Actress Anushka Says Chennai Dosa is her favorite food and she almost addicted to the taste.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil