»   »  'அவர்' பேச்சை கேட்டிருந்தால் நமக்கு நீலாம்பரி, சிவகாமி கிடைத்திருப்பாரா?

'அவர்' பேச்சை கேட்டிருந்தால் நமக்கு நீலாம்பரி, சிவகாமி கிடைத்திருப்பாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சோ ராமசாமியின் பேச்சை கேட்டிருந்தால் நமக்கு நீலாம்பரி, ராஜமாதா சிவகாமி கிடைத்திருக்க மாட்டார்.

13 வயதில் நடிக்க வந்தவர் ரம்யா கிருஷ்ணன். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழி படங்களிலும் ஹீரோயினாக நடித்தவர்.

அந்த 5 மொழி திரையுலகிலும் வெற்றிகரமான ஹீரோயினாக வலம் வந்தார். தற்போது குணச்சித்திரம் மற்றும் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

ரம்யா கிருஷ்ணன்

ரம்யா கிருஷ்ணன்

ரம்யா கிருஷ்ணனின் நடிப்பை பற்றி அனைவருக்கும் தெரியும். கதாபாத்திரமாகவே மாறி நடிப்பார். தனது இன்ஸ்பிரேஷனான மறைந்த முன்னாள்
முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசைப்படுகிறார்.

சோ

சோ

ரம்யா கிருஷ்ணன் மறைந்த நடிகரும், அரசியல் விமர்சகருமான சோ ராமசாயின் உறவினர் என்பது அனைவருக்கும் தெரியும். ரம்யா நடிகையாவது சோவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம்.

படையப்பா

படையப்பா

சோவுக்கு விருப்பம் இல்லை என்று தெரிந்தும் நடிக்க வந்துள்ளார் ரம்யா. காலப்போக்கில் கருத்து வேறுபாடு மாறியுள்ளது. பின்னர் ரஜினியுடன் சேர்ந்து படையப்பா படத்தை பார்த்துள்ளார் சோ.

படையப்பா

படையப்பா

ரம்யா, ரஜினியுடன் அமர்ந்து படையப்பா படத்தை பார்த்து ரசித்துள்ளார் சோ. அந்த நாளை தன்னால் மறக்க முடியாது என்கிறார் ரம்யா. படத்தை பார்த்த பிறகு அவர் ரம்யாவிடம், அருமை மேடம், நல்லா நடித்துள்ளீர்கள் என்றாராம்.

நீலாம்பரி

நீலாம்பரி

ரம்யா கிருஷ்ணன் படையப்பா படத்தில் நீலாம்பரியாக நடித்ததையும், பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களில் ராஜமாதா சிவகாமியாக நடித்ததையும் யாராலும் மறக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Ramya Krishnan's uncle Cho Ramaswamy was against her entering the film industry.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil