»   »  ஜலக் ஜலக் ஜடக்!

ஜலக் ஜலக் ஜடக்!

Subscribe to Oneindia Tamil

இளமைப் பட்டாசாக சென்னை 600028ல் வெடித்துள்ளார் கிறிஸ்டினா ஜடக்.

சகலகலாவல்லவன் கங்கை அமரனின் புதல்வன் வெங்கட் பிரபு இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள படம்தான் சென்னை 600028. இளைஞர் கூட்டத்தை வைத்து இப்படத்தை இயக்கியுள்ள வெங்கட் பிரபு, துள்ளலான கிறிஸ்டினா ஜடக் என்ற அழகிய நாயகியையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

எல்லா வனப்பும் ஏறக்குறைய சீரும், சிறப்புமாக அமைந்துள்ள கிறிஸ்டினா ஜடக், இளைஞர்களின் கனவை கலைத்துப் போடும் உத்தேசத்துடன் படத்தில் விளையாடியுள்ளாராம்.

கிளாமர் காட்சிகளில் கிறிஸ்டினாவின் அட்டகாசம் அமர்க்களமாக இருக்கிறதாம். முதல் படத்திலேயே கிளாமரில் முத்திரை பதித்துள்ள கிறிஸ்டினா, இளைஞர்களின் மனதை மோக முள்ளால் வேகமாக தாக்குவது நிச்சயம் என்கிறார்கள் கோலிவுட் குசும்பர்கள்.

கிறிஸ்டினாவுக்கு இதுதான் முதல் படம். முதல் படத்திலேயே சகலகலா திறமைகளையும் சக்கையாகப் பிழிந்தெடுத்து விட்டார் வெங்கட் பிரபு என்று வாயாராப் பாராட்டுகிறார்.

எனது முதல் படத்திலேயே மிகவும் கவர்ச்சியாக நடித்து இருப்பதாக கூறுகிறார்கள். இப்போது கவர்ச்சி இல்லாமல் சினிமா இல்லை. கதைக்கு தேவை என்பதால் தான் இந்த படத்தில் கொஞ்சம் கவர்ச்சி காட்டி நடித்துள்ளேன்.

முக்கியமாக ரசிகர்களை கவர்ந்து இழுக்கவே நான் கவர்ச்சியாக நடித்தேன். இதில் ஆபாசம் எதுவும் இருக்காது. எனது அடுத்த படத்தில் இதைவிட சிறப்பாக செய்ய விருப்புகிறேன். அடுத்து கேரக்டருக்கு முக்கியதுவம் தரும் படத்தில் தான் நடிப்பேன்.

இரண்டு நாயகிகள் கதை என்றாலும் எனக்கு சம்மதம் தான். ஆனால் அதில் எனக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிப்பேன் என குளும குளுவென பேசினார் கிறிஸ்டினா.

ஜலக் ஜலக் என இருக்கும் கிறிஸ்டினா, கலக் கலக் என கலக்கட்டும்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil