»   »  காமெடியோடு சென்டிமெண்ட் ரோலில் நடிக்க ஆசைப்படும் மதுமிதா

காமெடியோடு சென்டிமெண்ட் ரோலில் நடிக்க ஆசைப்படும் மதுமிதா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஓகே ஓகேயில் ஜாங்கிரியாக வந்து சிரிக்க வைத்த மதுமிதா சின்னத்திரையில் வந்து இல்லத்தரசிகளை சிரிக்க வைத்து உறங்க வைக்கிறார். காமெடி கேரக்டர்களில் அசத்தும் மதுமிதாவிற்கு சென்டிமென்ட் சீனில் நடிக்கவும் ஆசையாக இருக்கிறதாம்.

சன் டிவியில் சனிக்கிழமை இரவு சின்னப்பாப்பா பெரிய பாப்பாவில் பப்புவாக வந்து தெலுங்குடன் தமிழ் கலந்து பேசும் மதுமிதாவை பார்த்தால்தான் பலருக்கும் உறக்கம் வருகிறது.

"Comedy" Mathumitha wants to do sentimental roles too

வெள்ளித்திரையில் ஓகே ஓகே படத்தில் அடையாளம் காணப்பட்ட மதுமிதாவிற்கு சின்னத்தில் சீரியலில் நல்ல அடையாளம் கிடைத்துள்ளது. இப்போது தினசரி இரவு 10.30 மணிக்கு காமெடி ஜங்சனில் கலக்கி வருகிறார்.

சன் டி.வி 'காமெடி ஜங்ஷன்' நிகழ்ச்சியை பார்த்து சிரித்து விட்டுதான் பலரும் உறங்குகிறார்களாம். இதனால் மதுமிதா மகிழ்ச்சியடைந்துள்ளார்.

ஷூட்டிங் ஸ்பாட்ல, எனக்கான டயலாக்ஸை கேட்டு வாங்கி, அதில் நானே சில அட்ராக்டிவ்வான வார்த்தைகளைச் சேர்த்து, ரிகர்சல் பார்த்துட்டுதான் நடிப்பேன் என்கிறார் மதுமிதா.

காஸ்மோரா படத்துல கார்த்திக் சாரோட தங்கை ரோல், தமிழ், தெலுங்கு படம்னு நான் நடிச்ச திரைப்படங்கள் விரைவில் ரிலீஸ் ஆகவிருக்கு என்கிறார் மதுமிதா.

காமெடி மட்டுமில்ல, எனக்கு சென்டிமென்ட்டும் ரொம்ப நல்லா வரும். ரிலீஸ் ஆகவிருக்குற 'கொஞ்சம் கொஞ்சம்' படத்துல காமெடி, சென்டிமென்ட்னு ரெண்டும் செய்திருக்கேன்.

ஆச்சி மனோரமா, கோவை சரளாம்மா மாதிரி இல்லாம, திரைப்படங்களில் இப்போ காமெடி நடிகைகளுக்கான ஸ்கோப் ரொம்பவே கம்மியா இருக்கு. அப்பப்போ ட்ராக்கு மட்டுமில்லாம, செந்தில் கோவை சரளா மாதிரி ஜோடி காமெடிக்கான வாய்ப்பை இயக்குநர்கள் கொடுக்கணும்! என்றும் கோரிக்கை வைக்கிறார்.

டைரக்டர்ஸ் நோட் திஸ் பாய்ண்ட்.

English summary
Female comedian Mathumitha is willing to do sentimental roles too in cinema and TV.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil