»   »  ஆபாச உடை: ஷ்ரியா மீது புகார்

ஆபாச உடை: ஷ்ரியா மீது புகார்

Subscribe to Oneindia Tamil
Shreya
சென்னையில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்ட சிவாஜி பட வெள்ளிவிழாவின்போது ஆபாசமாக உடை அணிந்து வந்த நடிகை ஷ்ரியா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் நிலையத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா நினைவு மண்டபத்தில் சிவாஜி பட வெள்ளி விழா நடந்தது. இதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு கலைஞர்களுக்கு கேடயங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் நடிகை ஷ்ரியா படு கவர்ச்சிகரமான உடையுடன் வந்திருந்தார். ப்ரீ.கே.ஜி, எல்.கே.ஜி. குழந்தைகள் போடக் கூடிய பிராக் போன்ற உடையுடன் அவர் படு கிளாமராக வந்திருந்தது கூட்டத்தினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. அந்த உடையோடுதான் முதல்வரிடமிருந்தும் அவர் கேடயம் பெற்றுக் கொண்டார்.

இந்த நிலையில் ஷ்ரியா ஆபாச உடை அணிந்து வந்ததால், இளைஞர்களின் மனம் கெட காரணமாக அமைந்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் அண்ணா சாலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதில், பொது நிகழ்ச்சியில் இவ்வாறு ஆபாசமாக உடை அணிந்து வந்தது கலாச்சாரத்தை சீரழிக்கும் போக்காகும். இதனால் பல இளைஞர்களின் மனம் பாதிக்கப்பட்டிருக்கும். எனவே ஷ்ரியா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

புகார் மனுவைப் பெற்ற போலீஸார், பெற்றுக் கொண்டோம் என்பதற்கான ரசீதை மட்டும் ராமமூர்த்தியிடம் கொடுத்தனர். இதுவரை புகாரைப் பதிவு செய்யவில்லை.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil