»   »  மலர் டீச்சர் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி.. மணிரத்னம் படத்தில் இருந்து சாய் பல்லவி விலகல்

மலர் டீச்சர் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி.. மணிரத்னம் படத்தில் இருந்து சாய் பல்லவி விலகல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மலர் டீச்சர் ரசிகர்களே, நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த இயக்குநர் மணிரத்னத்தின் அடுத்த திரைப்படத்தில், சாய் பல்லவி நடிக்கவில்லையாம்.

மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜூன் மாதம் புதிய திரைப்பட சூட்டிங் தொடங்கப்பட உள்ளது. இதுவும் மணிரத்னத்தின் டிரேட் மார்க்கான ரொமான்ட்டிங் சப்ஜெக்ட்தான் என்று கூறப்படுகிறது.

CONFIRMED: Aditi Rao Hydari Replaces Sai Pallavi In Mani Ratnam's Next

கார்த்தி ஹீரோவாக நடிக்க உள்ள இப்படத்தில், பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சராக நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

பிரேமம்+அலைபாயுதே உணர்வை தரவல்ல திரைப்படம் என்ற பூரிப்பில் ரசிகர்கள் இருந்தனர். இந்நிலையில், இந்த படத்தில் இருந்து சாய் பல்லவி விலகியுள்ளார்.

ஹிந்தி நடிகை ஆதிதி ராவ் அவருக்கு பதிலாக நடிக்க உள்ளார். படத்தின் சூட்டிங் தொடங்க தாமதம் ஏற்படுவதால், வேறு ஒரு பட கால்ஷீட்டுக்கு இடைஞ்சல் ஏற்படுகிறது என்று கருதி, சாய் பல்லவி விலகியுள்ளதாக ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

English summary
Hindi actress Aditi Rao Hydari has been brought on board as the leading lady in ace film-maker Mani Ratnam's next Tamil romantic-drama. Aditi has replaced Sai Pallavi in the film, which also features Karthi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil