»   »  தெலுங்கு, இந்தியைத் தொடர்ந்து கன்னடத்தில் கால் பதிக்கும் 'சர்ச்சை' பூனம் பாண்டே

தெலுங்கு, இந்தியைத் தொடர்ந்து கன்னடத்தில் கால் பதிக்கும் 'சர்ச்சை' பூனம் பாண்டே

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: சர்ச்சை நடிகை பூனம் பாண்டே அடுத்ததாக கன்னடத் திரையுலகில் கால் பதிக்கவிருக்கிறார்.

இந்தியா உலகக்கோப்பையை வென்றால் நிர்வாணமாக காட்சி தருவேன் என்று கடந்த 2011 ம் ஆண்டு பரபரப்பு கிளப்பியவர் பூனம் பாண்டே.

தொடர்ந்து இதுபோன்ற சர்ச்சைகளால் புகழ்பெற்ற பூனம் பாண்டே தற்போது இந்தி மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கன்னடத் திரையுலகில் கால்பதிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருக்கிறது.

Controversial Actress Poonam Pandey To Showcase Her Talent In Sandalwood!

தெலுங்கு இயக்குநர் யுவராஜ் இதுகுறித்து கூறும்போது " நீண்ட நாட்களாக கன்னடத்தில் படமொன்றை இயக்க வேண்டும் என்று காத்திருந்தேன். இப்போது என்னுடைய ஆசை நிறைவேறிவிட்டது.

கடந்த 6 மாதங்களாக இந்தப் படத்திற்கான கதையை உருவாக்கி வருகிறேன். பெண்களை மையமாகக் கொண்ட இக்கதைக்கு பூனம் பாண்டே மிகவும் பொருத்தமாக இருப்பார்.

அவர் கன்னடப்படங்களில் நடிக்க ஆர்வம் கொண்டிருந்ததால், இப்படத்தின் கதையைக் கேட்டவுடன் ஒப்புக் கொண்டார்" என்று கூறியிருக்கிறார்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நேற்று தொடங்கியுள்ளது. திகில் படமாக உருவாகி வரும் இப்படத்தில் பூனம் பாண்டே முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் சர்ச்சையை ஏற்படுத்தும் ஆடை அவிழ்ப்புக் காட்சிகள் இதில் இருக்காதென்றும் படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

English summary
Actress Poonam Pandey is all set to make her Sandalwood debut in a yet untitled horror-romantic movie. The film will be directed by Telugu director Yuvaraj, who too, will be making his Kannada debut with the film.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil