தனுஷ் பட நடிகை பை செக்‌ஷுவலா.. அரசியல்வாதி மனைவி மீது ஆசை.. இப்படி ஓபனா போட்டு உடைச்சிட்டாரே!

சென்னை: 37 வயதான நடிகை ஸ்வரா பாஸ்கர், எந்த கருத்தாக இருந்தாலும் அதை துணிந்து சொல்லக்கூடியவராக இருப்பதால், அவ்வப்போது அவரின் பேச்சு பேசு பொருளாகி விடும். தற்போது இவர், தன்னை இருபாலின உறவு கொண்டவர் என வெளிப்படையாக சொல்லி புயலை கிளப்பி உள்ளார்.

டெல்லியில் பிறந்து வளர்ந்த ஸ்வரா பாஸ்கர், 'தனு வெட்ஸ் மனு' வில் ஒரு சிறிய ரோலில் நடித்து பிரபலமானார். அதைத் தொடர்ந்து தனுஷ் நடித்த ராஞ்சனாவில் ஒரு முக்கியமான ரோலில் நடித்திருந்தார். அந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பிலிம்பேர் விருதை பெற்றார். தொடர்ந்து படத்தில் நடித்து வரும் இவர். 2023ம் ஆண்டு ஃபஹத் அகமது என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமான அதே ஆண்டே இந்த தம்பதிகளுக்கு குழந்தை பிறந்தது. தனது மகளுக்கு ரபியா என பெயர் வைத்துள்ளார்.

Dhanush Raanjhanaa Swara Bhasker
Photo Credit:

நடிகையின் சர்ச்சை பேச்சு: அண்மையில் ஸ்வரா பாஸ்கர் தனது கணவருடன் இணைந்து செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்து இருந்தார். அதில், ஸ்வரா பாஸ்கர் தான் இருபாலின உறவு கொண்டவர் என்றும், மக்களை அவர்களின் விருப்பத்திற்கு விட்டால், அனைவரும் இருபாலினத்தவர்கள் தான் என்றார். ஸ்வரா பாஸ்கரின் இந்த பதிலை கேட்டு அதிர்ச்சி அடைந்த தொகுப்பாளர். "உங்களுக்கு யார் மீதாவது அப்படி ஒரு ஆசை உள்ளதா? அதை வெளிப்படையாக சொல்ல விரும்புகிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த ஸ்வரா பாஸ்கர், தனது கணவர் பஹாத்தை சுட்டிக்காட்டி, இதற்கு நான் பதில் அளித்தால். என் கணவர் பஹாத்தின் எதிர்காலம் உத்தர பிரதேசத்தில் கேள்விக்குறியாகும் என்றார். பின் தொடர்ந்து பேசிய அவர், நான் "டிம்பிள் யாதவ் ஜி"யை சந்தித்தபோது அவர் மீது எனக்கு ஒரு விதமான ஈர்ப்பு ஏற்பட்டது" என்றார். தொகுப்பாளர், டிம்பிள் யாதவா... என யோசித்துக்கொண்டு இருக்க, அருகில் இருந்த ஸ்வரா பாஸ்கரின் கணவர் பஹத், "அகிலேஷ் யாதவ் ஜியின் மனைவி" என்றார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் புயலை கிளப்பி உள்ளது.

முட்டாள் தனமான பேச்சு: இந்த வீடியோவை பார்த்த பலர், சமூக வலைத்தளங்களில் ஸ்வரா பாஸ்கரை கேலி செய்து மோசமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இணையவாசி ஒருவர் ஸ்வரா பாஸ்கரின் அசட்டு கணவனுக்கு கன்னையா குமார் மீது ஈர்ப்பு இருக்குமோ என பதிவிட்டுள்ளார். மற்றொருவர், "முட்டாள் பெண்" என்றும், இந்த வீடியோவை ஏன் வெளியீட்டீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. அவளைப் பிரபலப்படுத்துவதை நிறுத்துங்கள், அவரால் நடிகையாக ஜெயிக்க முடிவில்லை என்பதால், இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி பிரபலமாகலாம் என்று நினைக்கிறார் என தனுஷ் பட நடிகையை திட்டி தீர்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X