Rachita Ram: கூலி பட நடிகைக்கு விரைவில் டும் டும்.. அவரே சொன்ன குட் நியூஸ்!

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'கூலி' படத்தில் ரச்சிதா ராம் முழுக்க முழுக்க நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கூலி திரைப்படம் வெளியானதும், அனைவரும் யார் இந்த ரச்சித் என தேடும் அளவிற்கு மனதில் பதிந்து போன இவர் தற்போது தனது ரசிகர்களுக்கு குட் நியூஸ் ஒன்றை சொல்லி உள்ளார்.

கன்னடத்தில் டிம்பிள் குயின் அழைக்கப்படும் ரச்சிதா ராமி, தொலைக்காட்சிகளில் பலத் தொடர்களில் நடித்துள்ளார். இவர், 2013 ஆம் ஆண்டு வெளியான 'புல்புல்' படத்தின் மூலம் பெரிய வெள்ளித்திரையில் அறிமுகம் ஆனார். அந்த படம் தெலுங்கில் பிரபாஸ், அனுஷ்கா நடித்த 'டார்லிங்' படத்தின் ரீமேக் ஆகும். இந்த படம் கன்னடத்தில் பிளாக் பஸ்டர் ஹிட்டாகி வசூலை அள்ளியது. அந்த படத்தை தொடர்ந்து 2015ஆம் ஆண்டு சுதீப் உடன் இவர் நடித்த 'ரன்னா' படத்தில் நடித்தார். அந்த படத்துக்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான ஃப்லிம்பேர் விருது கிடைத்தது.

Rachita Ram coolie
Photo Credit:

ரச்சிதா ராம்: அதன் பின்,சக்ரவ்யூஹா புஷ்பக விமானம், பர்ஜரி,அயோக்யா, சீதாராம கல்யாண, நடசார்வபவுமா, ஆயுஷ்மான் பவ, மான்சூன் ராகா மற்றும் கிராந்தி உள்ளிட்ட படங்களின் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தார். ரச்சிதா ராம் 'ஐ லவ் யூ' படத்தில் பாடல் காட்சி ஒன்றில், உபேந்திராவுடன் மிகவும் நெருக்கமாக நடித்திருந்தார். இதைப்பார்த்த ரச்சிதா ராமின் பெற்றோர் அவரை கடுமையாக கண்டித்தனர். இதனால் அவரது குடும்பத்தில் பெரிய சண்டை வெடித்து, தன்னுடைய சொந்த வீட்டைவிட்டே ரச்சிதா வெளியேறியதாக கூறப்படுகிறது.

விரைவில் நல்ல செய்தி: கூலி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக மாறி உள்ள ரச்சிதா ராம், தனது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். பெங்களூருவில் திரைப்பட விழா ஒன்றில் ரச்சிதா ராம் கலந்து கொண்டார். அப்போது, செய்தியாளர் ஒருவர், உங்களுக்கு எப்போது, திருமணம் வருங்கால காரணம் எப்படி இருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பி உள்ளார். இந்த கேள்விக்கு வெட்கத்துடன் பதிலளித்த நடிகை ரச்சிதா ராம், 'இன்னும் சில நாட்களில் நான் தாம்பத்திய வாழ்க்கையில் கால் பதிக்க இருக்கிறேன். எனக்கு கணவனாக வரப்போகிறவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எனக்கு எந்தவித கனவும் இல்லை. வீட்டில் எனக்கு வரன் பார்க்கும் தொடங்கிவிட்டார்கள். இதனால், விரைவில் நல்ல செய்தி வரும் என்றார். நடிகை ரச்சிதா ராம் தற்போது நடிப்பில் 'லேண்ட் லார்ட்" மற்றும் அயோக்யா-2 ஆகிய 2 திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X