தொழிலதிபர் மீது அமலாபால் தொடர்ந்த வழக்கு... கோர்ட் விதித்த அதிரடி உத்தரவு

சென்னை : தொழிலதிபர் மீது நடிகை அமலாபால் கொடுத்த புகாரில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக இருக்கும் அமலாபால், சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். மைனா, தலைவா, தெய்வ திருமகள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். 2014 ம் ஆண்டு டைரக்டர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இரண்டு வருடங்களிலேயே டைரக்டர் விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து பெற்றார் அமலாபால். 2017 ம் ஆண்டு விஜய்யிடம் இருந்து விவாகரத்து பெற்ற அமலாபால், ஆடை போன்ற சில படங்களில் நடித்த விவகாரம் சர்ச்சையானது. இதனால் அவருக்கு பட வாய்ப்புக்கள் பெரிய அளவில் இல்லாமல் போனது.

பரபரப்பை கிளப்பும் அமலாபால்

பரபரப்பை கிளப்பும் அமலாபால்

அதே சமயம் மிக மோசமான கவர்ச்சி உடைகளில் ஊர் சுற்றியும், போட்டோஷுட் நடத்தியும் சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார் அமலாபால். இந்நிலையில் இவர் நான்கு வருடங்களுக்கு முன் தொடர்ந்து வழங்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

டான்ஸ் அகாடமியில் பயிற்சி

டான்ஸ் அகாடமியில் பயிற்சி

இவர், கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மலேசியாவில் நடைபெற இருந்த'டாஸ்லின் தமிழச்சி' என்ற கலை நிகழ்ச்சியில் பங்கேற்பதாக இருந்தார். இதற்காக சென்னை தி.நகரில் ஸ்ரீதர் என்பவர் நடத்தி வரும் 'மான்ஜான்ஸ்' டான்ஸ் பயிற்சி அகடாமியில் அமலாபால் பயிற்சி எடுத்தார்.

அமலாபாலை கட்டாயப்படுத்திய நபர்

அமலாபாலை கட்டாயப்படுத்திய நபர்

அப்போது, அழகேசன் என்பவர் அமலாபாலிடம், மலேசியா செல்லும்போது இப்ராகிம் என்பவருடன் இரவு உணவு அருந்த வேண்டும் என்று பேசியுள்ளார். இதுகுறித்து கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் அமலாபால் கொடுத்த புகாரின் அடிப்படையில், தி.நகர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்தார்.

அமலா பால் தொடர்ந்த வழக்கு

அமலா பால் தொடர்ந்த வழக்கு

இந்த வழக்கில் ஸ்ரீதர், அழகேசன், பாஸ்கரன், இப்ராகிம் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை சைதாப்பேட்டை
17-வது குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சைதாப்பேட்டையை சேர்ந்த
தொழிலதிபர் பாஸ்கரன், ,ஸ்ரீதரன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை

எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை

அதில், இந்த வழக்கில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. ஆனால், குற்றவாளிகளாக போலீசார் சேர்த்துள்ளனர். எனவே, வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று கூறியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்த்து.

 நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு

நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு

இந்த நிலையில் வழக்கு மீண்டும் நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது எனக் கூறி குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X