காத்துவாக்குல ரெண்டு காதல்.. சமந்தாவுக்கு ஜோடி கிரிக்கெட் வீரரா?.. அப்போ விஜய்சேதுபதிக்கு ?

சென்னை : காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் சமந்தாவின் பாய் பிரெண்டாக பிரபல கிரிக்கெட் வீரர் நடித்துள்ளார்

கண்மணி கதாபாத்திரத்தில் நயன்தாராவும், கதிஜா கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடித்துள்ளனர். இவர்கள் இருவரையும் காதலிப்பவராக விஜய்சேதுபதி இந்தப் படத்தில் நடித்துள்ளார்.

இத்திரைப்படம் ஏப்ரல் 28ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. தமிழில் இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.

காத்துவாக்குல ரெண்டு காதல்

காத்துவாக்குல ரெண்டு காதல்

விக்னேஷ் சிவன் நயன்தாராவின் ரவுடி பிலிம்ஸ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவர உள்ள படம் காத்துவாக்குலரெண்டு காதல். வரும் 28 தேதி திரைக்கு வர உள்ள இப்படம் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் விஜய்சேதுபதியை பார்க்கலாம் சமீபகாலமாக அவர் நடிக்கும் கேரக்டர்கள் விடுத்து காதல் ரசம் பொங்க ஒரு கிளாமர் ஹீரோவாக இந்த படத்தில் நடித்துள்ளார் .

அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

நயன்தாரா, சமந்தா இருவருக்குமே இன்று மிகப்பெரிய அளவில் ரசிகர் கூட்டம் உள்ளது. இவர்கள் தனித்தனியாக நடித்தாலே பார்ப்பதற்கு தனி கூட்டம் உள்ள நிலையில் இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடித்துள்ளதால் இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் ஏகிறி உள்ளது.

சமந்தாவின் பாய் பிரெண்ட்

சமந்தாவின் பாய் பிரெண்ட்

காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் டிரைலர் இன்று இரவு வெளியாக உள்ளது. கதிஜா - ராம்போ லவ் ஸ்டோரி என்ற பெயரில் வெளியாகியிருக்கும் டிப்பம் டிப்பம் என்ற பாடலில் இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் நடித்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. சமந்தாவுக்கு ஜோடியாக அவர் இந்த படத்தில் நடிப்பதாக தெரிகிறது. பாடல் காட்சியில் ஒரு பப்பில் சமந்தா அமர்ந்திருப்பதும், விஜய்சேதுபதி அங்கே வருவது போலவும் சமந்தா அவரை பார்ப்பது போலவும் அந்த பாடல் காட்சிகள் வருகிறது.

பிரபல கிரிக்கெட் வீரர்

பிரபல கிரிக்கெட் வீரர்

சமந்தாவுடன் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீஷாந்த் நடித்துள்ளார். ஒரு காலத்தில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளராக இருந்தார். மேட்ச் பிக்சிங் காரணமாக ஆடுவதற்கு தடை செய்யப்பட்டு வழங்கியிருந்தார். தடை விளக்கப்பட்டு ஆடத்தயார் என்று அறிவித்துள்ள நிலையில் ஐபிஎல் சீசனில் கூட அவரை யாரும் எடுக்கவில்லை என்கிற நிலையில் சினிமா பக்கம் அவரது பார்வை திரும்பி உள்ளது.

முக்கோண காதல் கதை

முக்கோண காதல் கதை

இந்த படத்தில் சமந்தாவின் காதலராக அவர் பப்பில் சமந்தாவுடன் அமர்ந்திருக்கிறார். சமந்தா அவர் கையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு விஜய்சேதுபதிக்கு உதவிடும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இன்னொரு காட்சியில் மெரினா கடற்கரை அருகே பாலத்தில் சேதுபதியும் சமந்தாவும் நின்றபடியே ஒருவருடன் ஒருவர் காதலுடன் பார்ப்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

சமந்தா யாரை காதலிக்கிறார்

சமந்தா யாரை காதலிக்கிறார்

நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி என முக்கோண காதல் என்பது போல் படம் இருந்தாலும் கிரிக்கெட் வீரர் காதலியாக வரும் சமந்தா, கிடைக்கும் கேப்பில் விஜய்சேதுபதியை காதலிக்கிறார். என்னடா தமிழ் சினிமா வரவர இப்படி போகிறது என்று ரசிகர்கள் ஒருபுறம் யோசித்தாலும் மறுபுறம் எதையும் ரசிக்கும் ஒரு கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது.

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம்

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம்

படத்தில் வரும் பாடலை வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள் படம் வெளிவந்த பின் கதையை பார்த்து பின்னர் முடிவு செய்யுங்கள் என்று ஒருபக்கம் ஒரு கூட்டம் கூறிவருகிறது. மொத்தத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏப்ரல் 28ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வருகிறது அப்போது சஸ்பென்ஸ் விலகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X