»   »  அப்பா கூட இருந்தா 'அப்பாடா'ன்னு இருக்கும்.. ஸ்ருதி ஹாசன்

அப்பா கூட இருந்தா 'அப்பாடா'ன்னு இருக்கும்.. ஸ்ருதி ஹாசன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: அப்பா செட்டில் இருந்தால் போதும், அந்த இடமே பாசிட்டிவாக மாறி விடும். கூட நடிப்பவர்களுக்கும் அவரிடமிருந்து பாசிட்டிவ் எனர்ஜி தொற்றிக் கொள்ளும் என்று அப்பா கமல்ஹாசன் குறித்து பெருமிதம் காட்டியுள்ளார் ஸ்ருதி ஹாசன்.

சபாஷ் நாயுடு.. தந்தையும், மகளும் இணைந்து பணியாற்றும் படம். அதாவது நடிப்பில். இருவரும் ஏற்கனவே உன்னைப் போல் ஒருவன் படத்தில் இணைந்து விட்டனர் - நாயகன் - இசையமைப்பாளராக.


Dad brings positivity on the sets: Shruti Haasan

சபாஷ் நாயுடு படத்தில் நடிகர்களாக இருவரும் முதல் முறையாக இணைந்துள்ளனர். கூடவே இளைய மகள் அக்ஷரா ஹாசன் உதவி இயக்குநராக இப்படத்தில் வேலை பார்க்கிறார்.


சபாஷ் நாயுடு படத்தின் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் இப்படம் குறித்து சிலாகிப்புடன் கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார் ஸ்ருதி ஹாசன்.


முதல் நாள் ஷூட்டிங் அட்டகாசமாக இருந்தது. அப்பாவுடன் பணியாற்றுவது மகிழ்ச்சி, கெளரவம். பாசிட்டிவிட்டியை நமக்குள் கொண்டு வந்து விடுகிறார். அவர் செட்டில் இருந்தாலே போதும். அப்படியே நமக்கும் அது தொற்றிக் கொள்கிறது என்று கூறியுள்ளார் ஸ்ருதி.சபாஷ் நாயுடு படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். பத்து வருடத்திற்குப் பிறகு இரு இமயங்களும் கை கோர்த்துள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தியில் சபாஷ் நாயுடு ரெடியாகி வருகிறது.


English summary
Actress Shruti Haasan is honoured to share screen space with father Kamal Haasan in upcoming trilingual action-comedy "Sabash Naidu". The "Welcome Back" actress, who began the shooting today, took to Twitter to share her excitement. "Fantastic first day of shoot - so honoured to be Working with my father- he brings so much positivity and passion to a set #sabashnaidu," the 30-year-old actress wrote.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil