தென்னிந்திய சினிமாவில் தொப்புள் மோகம் அதிகம்.. சந்தித்த மோசமான அனுபவம்.. டெய்சி ஷா பகீர்!

நடிகை டெய்ஸி ஷா, கன்னடத் திரையுலகில் தொப்புள் கவர்ச்சி மீதான மோகம் குறித்தும், பாடல்களில் தான் கவனித்த மோசமான அம்சங்கள் குறித்தும் சமீபத்தில் மனம் திறந்து பேசினார். சௌத்பிலிக்கு அளித்த நேர்காணலில், தென்னிந்தியத் திரையுலகில் தொப்புள் மீதான இந்த ஈர்ப்பு எவ்வாறு தொடர்கிறது என்பதை அவர் விவரித்தார்.

தென்னிந்தியத் திரையுலகில் தொப்புள் கவர்ச்சி பற்றி டெய்ஸி ஷா குறிப்பிடுகையில், "நான் ஒரு கன்னடப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது, எனது ஓய்வு நாட்களில் தொலைக்காட்சி பார்த்தேன். நான் பார்த்த அனைத்து கன்னடப் பாடல்களிலும்... ஒரு குறிப்பிட்ட நடிகர் இருந்தார். அவரது பாடல்கள் அனைத்திலும், கதாநாயகியின் தொப்புளின் மேல் ஃபுரூட் சாலட் அல்லது வெஜிடபிள் சாலட் தயாரிக்கப்பட்டது, அதிலும் க்ளோஸ்-அப் ஷாட்களுடன். சில சமயங்களில் தொப்புள் மீது ஐஸ் அல்லது தண்ணீர் ஊற்றப்பட்டது" என்றார்.

'ஜெய் ஹோ’ பட நடிகை, தனது சொந்த ஊரான டோம்பிவ்லியிலும், பின்னர் ஜெய்ப்பூரில் ஒரு படப்பிடிப்புத் தளத்திலும் தான் சந்தித்த மோசமான பாலியல் துன்புறுத்தல் அனுபவங்களையும் நினைவு கூர்ந்தார். "நான் டோம்பிவ்லியில் நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒருவர் என் அருகில் வந்து என்னைத் தகாத முறையில் தொட்டார். நான் திரும்பிப் பார்ப்பதற்குள் அவர் யார் என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை, ஏனெனில் அந்தப் பகுதி கூட்டமாக இருந்தது" என்று அவர் கூறினார்.

தனது முன்னாள் உறவு பற்றியும் ஒரு சம்பவத்தைப் பகிர்ந்த டெய்ஸி, "நாங்கள் ஒருமுறை ஒரு விருந்தில் பங்கேற்றோம், ஒருவர் என் கையைப் பின்னால் இருந்து இழுத்து, நடனமாடச் சொன்னார். அதற்காக கோபப்பட முடியாது. அதே விஷயம் அவருக்கு நடந்தபோது, நான் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்" அதன் பின்னர் அந்த உறவு முறிந்தது என்றார்.

டெய்ஸி ஷா தனது சினிமா வாழ்க்கையை பிரபலமான நடன அமைப்பாளர் கணேஷ் ஆச்சார்யாவுக்கு உதவியாளராகத் தொடங்கினார். அவர் 2011 ஆம் ஆண்டு கன்னடத் திரைப்படமான 'பத்ரா' மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர், 2014 ஆம் ஆண்டு சல்மான் கான் நடித்த ஹிந்திப் படமான 'ஜெய் ஹோ' வில் நடித்தார். ஒரு வருடத்திற்குப் பிறகு, அவர் 'ஹேட் ஸ்டோரி 3' படத்திலும், 2018 இல் 'ரேஸ் 3' படத்திலும் நடித்தார். 2023 இல், 'ஃபியர் ஃபேக்டர்: கத்ரோன் கே கிலாடி 13' நிகழ்ச்சியில் பங்கேற்றார். சமிபத்தில் அவர் அளித்த பேட்டி சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவிலும் தொப்புளில் பம்பரம் விடுவது, ஆம்லேட் போடுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான ஸ்ரீலீலாவின் வைரல் வைய்யாரி பாடல் வரை ஹீரோயின்களின் தொப்புள்களை காட்டித்தான் பட வியாபாரம் ஜோராக நடைபெற்று வருகிறது என சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.

தென்னிந்திய சினிமா மட்டுமின்றி பாலிவுட்டில் பிகினி காட்சிகளை காட்டித்தான் படமே ஓடுகின்றன என்றும் ஹாலிவுட்டில் நடிகைகள் நிர்வாணக் காட்சிகளில் நடிப்பதும் அதே சினிமா வியாபாரத்திற்காகத்தான் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X