»   »  தீ தீபிகா!!

தீ தீபிகா!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அழகுத் தீயாய் இருக்கும் தீபிகா படுகோன் கன்னடத்தில் இருந்து இந்தி சினிமா களத்தில் குதித்து விட்டார். முதல் படத்திலேயே ஷாருக் கானை உருகி உருகி காதலித்துள்ளாராம்.

முன்னாள் பேட்மிண்டன் புயல் பிரகாஷ் படுகோனின் செல்லப் புதல்விதான் தீபிகா படுகோன். அப்பாவைப் போல ராக்கெட்டைத் தூக்காமல் மாடலிங்கில் குதித்தார் அழகுப் பெண் தீபிகா.

நாட்டிலேயே நம்பர் ஒன் மாடலாக பிரகாசித்த தீபிகாவின் அசத்தல் அழகைப் பார்த்து சினிமாக்காரர்கள் ஓடி வந்து தங்களது படங்களில் நடிக்க வேண்டும் என்று அழைத்தனர்.

ஆனால் சினிமா வேண்டாம் என்று ஓரங்கட்டிய தீபிகா, விளம்பரப் படங்களில் மட்டும் நடித்து வந்தார். அவர் நடித்த அத்தனை விளம்பரப் படங்களும் சூப்பர் ஹிட் ஆகவே, விளம்பரப் படங்களிலும் வெற்றிக் கொடி நாட்டினார்.

இத்தனை நாட்களாக சினிமாவை டபாய்த்து வந்த தீபிகாவை, தாய்மொழியான கன்னட சினிமா விடவில்லை. விடாமல் துரத்தி அவரை நடிக்க வைத்துவிட்டனர்.

இதையடுத்து முழுக்க முழுக்க சினிமாவுக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டார் தீபிகா. இந்தியில் முதல் படமே ஷாருக் கானுடன்.

படத்தில் படு கிளாமரான ரோல் தீபிகாவுக்கு. இதற்காக தயங்கவே இல்லை தீபிகா. உடல் வனப்பும், எடுப்பும், அழகும் இருக்கும்போது அப்படிப்பட்ட கேரக்டர்களில்தானே நடிக்க முடியும். இளமை துள்ளி விளையாடும்போது இடையில் திரை எதற்கு என்று எதார்த்தமாக பேசுகிறார் தீபிகா.

முதல் படம் வருவதற்குள்ளேயே அடுத்தடுத்த மூன்று இந்திப் படங்களில் புக் ஆகியுள்ளாராம்.

பெரும் வெற்றி பெற்ற கிருஷ் படத்தின் அடுத்த இரண்டு பாகங்களிலும் தீபிகாதான் நாயகி. முன்பு பிரியங்கா சோப்ரா தான் இவற்றில் நடிப்பதாக இருந்தது. இப்போது அவரை ரீபிளேஸ் செய்துள்ளார் தீபிகா.

முழு ஆட்டத்தை ஆரம்பித்த பின்னர் எத்தனை பேரை தூக்கப் போகிறாரோ தீபிகா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil