»   »  அது ஏன் ரன்பிரையும், ரன்வீரையும் மட்டும் ஒப்பிடுகிறார்கள்?: தீபிகா படுகோனே

அது ஏன் ரன்பிரையும், ரன்வீரையும் மட்டும் ஒப்பிடுகிறார்கள்?: தீபிகா படுகோனே

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தனது முன்னாள் காதலர் ரன்பிர் கபூருடன், தற்போதைய காதலர் ரன்வீர் சிங்கை மக்கள் ஒப்பிடுவது நடிகை தீபிகா படுகோனேவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூரை காதலித்து வந்த தீபிகா படுகோனே அவரை பிரிந்தார். தற்போது தீபிகா நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து வருகிறார். இந்நிலையில் பலரும் ரன்பிர் மற்றும் ரன்வீரை ஒப்பிட்டு பேசுகிறார்கள். இது தீபிகாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

Deepika doesn't like comparisons between Ranveer, Ranbir

இது குறித்து தீபிகா கூறுகையில்,

ரன்பிர் மற்றும் ரன்வீரை மக்கள் ஒப்பிடுவது எனக்கு கோபத்தை வரவழைக்கவில்லை மாறாக வேடிக்கையாக உள்ளது. ஏன், நான் அமிதாப் பச்சன், இர்பான் கான் ஆகியோருடனும் தான் நடித்துள்ளேன். அவர்களை ஒப்பிடுவது தானே?

நான் பலருடன் சேர்ந்து நடித்துள்ளேன். ஆனால் ரன்பிர், ரன்வீரை மட்டும் ஒப்பிடுவது ஏன்? என்றார்.

English summary
Actress Deepika Padukone finds comparisons between her rumoured boyfriend Ranveer Singh and ex-beau

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil