»   »  பாலிவுட்டின் ரொம்ப காஸ்ட்லி நடிகை தீபிகா: சம்பளத்தை கேட்டாலே கிறுகிறுக்குதே

பாலிவுட்டின் ரொம்ப காஸ்ட்லி நடிகை தீபிகா: சம்பளத்தை கேட்டாலே கிறுகிறுக்குதே

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சஞ்சய் லீலா பன்சாலியின் பத்மாவதி படத்தில் நடிக்க தீபிகா ரூ.12 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம். இதன் மூலம் பாலிவுட்டின் காஸ்ட்லி நடிகையாகியுள்ளார் தீபிகா.

பெங்களூரில் இருந்து பாலிவுட் சென்றவர் தீபிகா படுகோனே. அவர் நடித்த முதல் படமான ஓம் சாந்தி ஓம் ஹிட்டானாலும் தீபிகா சிறிது காலம் பாலிவுட்டில் போராடினார். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டார்.

பின்னர் அதில் இருந்து மீண்டு வந்து தற்போது பாலிவுட்டின் முடிசூடா ராணியாக உள்ளார்.

ரூ.12 கோடி

ரூ.12 கோடி

தீபிகா படுகோனே தான் பாலிவுட்டின் வெற்றி நாயகி. காரணம் தொடர் வெற்றிகளை அளித்து வருகிறார். இந்நிலையில் அவர் சஞ்சய் லீலா பன்சாலியின் பத்மாவதி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அந்த படத்திற்கு அவர் வாங்கும் சம்பளம் ரூ.12.62 கோடி.

தீபிகா

தீபிகா

ரூ.12 கோடி சம்பளம் வாங்கியதன் மூலம் பாலிவுட்டின் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக ஆகியுள்ளார் தீபிகா. முன்னதாக கங்கனா ரனாவத் ரூ.11 கோடி சம்பளம் வாங்கியது தான் அதிக சம்பளமாக இருந்தது. ஆனால் அந்த ரூ.11 கோடி சம்பள விபரமும் உறுதி செய்யப்படவில்லை.

சம்பளம்

சம்பளம்

தீபிகா மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சஞ்சய் லீலா பன்சாலியின் ராம் லீலா(2013) படத்தில் நடிக்க ரூ.1 கோடி வாங்கினார். அதன் பிறகு 2 ஆண்டுகள் கழித்து அதே இயக்குனரின் பாஜிராவ் மஸ்தானி(2015) படத்திற்கு ரூ. 7 கோடி வாங்கினார். தற்போது அதே சஞ்சயின் படத்திற்கு ரூ.12 கோடி வாங்கியுள்ளார்.

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

பாலிவுட்டில் நடிகர்களை விட அதிக சம்பளம் வாங்க வேண்டுமானால் நீங்கள் பிரியங்கா சோப்ராவாக இருக்க வேண்டும் என்று நடிகை கல்கி கொச்லின் கடந்த ஏப்ரல் மாதம் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது பிரியங்காவை விட அதிக சம்பளம் வாங்கியுள்ளார் தீபிகா.

English summary
Deepika Padukone has become the costliest heroine of Bollywood. She receives Rs. 12.62 crore for her upcoming movie Padmavati.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil