ரெட்டை குடுமி.. பட்டு பாவாடை சட்டை.. அழகை அள்ளும் தீபிகா படுகோனேவின் மகள்!

மும்பை: தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் தம்பதியினர் தங்களின் மகள் துவா படுகோன் சிங்கின் புகைப்படத்தை முதல்முறையாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். குழந்தை பிறந்ததில் இருந்து இதுவரை மகளின் முகத்தை காட்டாமல் ரகசியமாக வைத்திருந்த தீபிகா முதன் முறையாக தனது மகளின் போட்டோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

பாலிவுட்டில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் தீபிகா படுகோனே, தமிழில் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த திரைப்படம் அனிமேஷன் திரைப்படம் என்பதால், அதில் தீபிகா படுகோனேவின் ரோல் பெரிதாக பிரகாசிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால், இவர் ஷாருக்கானுடன் இணைந்து நடித்த சென்னை எக்ஸ்பிரஸ், ஜவான், கல்கி கி.பி 2898 திரைப்படங்களின் மூலம் தமிழ் ஆடியன்ஸ் மனதை வெகுவாக கவர்ந்தார்.

Deepika Padukone Ranveer Singh Dua
Photo Credit:

தீபிகா படுகோனே: இவர் பாலிவுட்டின் ஸ்டார் நடிகரான ரன்வீர் சிங்குடன் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவான ராம்லீலா படத்தில் சேர்ந்து நடித்த போது இருவரும் காதலிக்கத் தொடங்கினார்கள். பல ஆண்டுகளாக காதலர்களாக சுற்றி வந்த இவர்கள் 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு தீபிகா படுகோனே, பல ஹிட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவ்வப்போது, தீபிகா கர்ப்பமாக இருப்பதாக வதந்திகள் பரவி வந்த நிலையில், திருமணமாகி ஆறு ஆண்டுகளுக்கு பிறகு தீபிகா கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை அறிவித்து இருந்தார்.ன

மகள் போட்டோ: தீபிகா கர்ப்பமாக இருக்கும் போதே, நாக் அஸ்வினின் இயக்கத்தில் உருவான கல்கி கி.பி 2898 படத்தில் நடித்தார். இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கர்ப்பமாக இருக்கும் தீபிகாவை பார்த்து அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தீபிகா படுகோனேவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தனது மகளுக்கு துவா படுகோன் சிங் என பெயர் வைத்துள்ளார். "துவா படுகோன் சிங்" என்ற பெயர், துவா மற்றும் படுகோன் ஆகிய இரண்டு பெயர்களின் கலவையாகும். குழந்தை பிறந்ததில் இருந்து இதுவரை மகளின் முகத்தை காட்டாமல் ரகசியமாக வைத்திருந்த தீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதியினர் தங்கள் மகளின் புகைப்படத்தை முதன் முதலாக இணையத்தில் பதிவிட்டுள்ளனர். இருவரும் மகளுடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படத்தை பதிவிட்டு, குழந்தையின் முகத்தை பார்க்க நீண்ட நாட்களாகக் காத்திருந்த ரசிகர்களுக்கு தீபாவளி பரிசளித்துள்ளனர். துவாவின் போட்டோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி பலரும், தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X