»   »  தலைக்கு ரூ.10 கோடி அறிவிப்பு.. பயந்துபோன தீபிகா.. படப்பிடிப்புகள் திடீர் ரத்து!

தலைக்கு ரூ.10 கோடி அறிவிப்பு.. பயந்துபோன தீபிகா.. படப்பிடிப்புகள் திடீர் ரத்து!

Posted By:
Subscribe to Oneindia Tamil
தலைக்கு ரூ.10 கோடி அறிவிப்பு.. பயந்துபோன தீபிகா..வீடியோ

மும்பை: தலைக்கு 10 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து படப்பிடிப்புகளை தீபிகா படுகோன் ரத்து செய்துள்ளார்.

நடிகை தீபிகா படுகோன் நடிப்பில் இயக்குநர் சஞ்ஜய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பத்மாவதி. ராஜஸ்தான் மாநிலம் சித்தூரை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகியுள்ளது.

ராஜபுத்திர மன்னனை திருமணம் செய்த தீபிகா படுகோன் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி மீது காதல் வயப்படுவது போல் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு ராஜபுத்திர இனத்தவர்களும் இந்து அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

தீபிகாவுக்கு எதிர்ப்பு

தீபிகாவுக்கு எதிர்ப்பு

மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், அரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் தீபிகா படுகோன் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. பத்மாவதி படத்தில் நடித்த தீபிகா படுகோனுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

உயிரோடு எரித்தால்..

உயிரோடு எரித்தால்..

பட எதிர்ப்பாளர்கள் லட்சுமணன், சூர்ப்பனகையின் மூக்கை அறுத்தது போல் தீபிகா படுகோனேவின் மூக்கை அறுப்போம் என்று எச்சரித்தனர். தீபிகா படுகோனேவை உயிரோடு எரிப்பவருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று சத்ரிய மகா சபா அறிவித்தது.

தீபிகா தலைக்கு ரூ.10 கோடி

தீபிகா தலைக்கு ரூ.10 கோடி

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த பாஜக ஊடக தொடர்பாளர் சூரஜ் பால் அமு இந்த தொகையை உயர்த்தினார். தீபிகா படுகோனே மற்றும் சஞ்சய் லீலா பன்சாலி தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என்றார்.

தீபிகா வீட்டிற்கு பாதுகாப்பு

தீபிகா வீட்டிற்கு பாதுகாப்பு

இதற்கு பாலிவுட் நட்சத்திரங்கள், கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். கர்நாடகாவில் உள்ள தீபிகாவின் வீட்டிற்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

படப்பிடிப்புகள் திடீர் ரத்து

படப்பிடிப்புகள் திடீர் ரத்து

இந்நிலையில் தொடர் கொலை மிரட்டல்களால் தீபிகா படுகோன் அச்சமடைந்துள்ளதாக தெரிகிறது. இதனால் படபிடிப்புகளில் பங்கேற்பதை ஒத்திவைத்துள்ளார் தீபிகா. மேலும் விழாக்களில் பங்கேற்பதையும் அவர் ரத்து செய்துள்ளார்.

விழாவுக்கு வரமுடியாது

விழாவுக்கு வரமுடியாது

ஹைதராபாத்தில் வரும் 28ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள தீபிகா படுகோன் ஒப்புதல் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது விழாவுக்கு வரமுடியாது என தீபிகா மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து கொலை மிரட்டல்

தொடர்ந்து கொலை மிரட்டல்

தனது தலைக்கு 10 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதியே தீபிகா வீட்டிற்குள் முடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைத்தும் தீபிகாவுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Deepika padukone has canceled her shootings and programs suddenly. She is feared of the threatens of Padmavathi movie controversy.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil