»   »  ஹாலிவுட் போன குஷியில... தீபிகா படுகோன் பாலிவுட்டை மறந்துட்டாராமே?

ஹாலிவுட் போன குஷியில... தீபிகா படுகோன் பாலிவுட்டை மறந்துட்டாராமே?

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்செல்ஸ்: பாலிவுட்ல இருந்து ஹாலிவுட்டுக்கு போன தீபிகா படுகோன் பாலிவுட்டை மறந்து போனதுதான் தற்போதைய ஹாட் - டாபிக்.

பாலிவுட்டின் 100 கோடி நாயகி என்று புகழப்படும் தீபிகா படுகோனுக்கு ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் வின் டீசலின் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் அதிர்ஷ்டம் வாய்த்திருக்கிறது.

தற்போது கனடாவின் டொராண்டோ நகரில் XXX படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் வின் டீசலுடன் இணைந்து தீபிகா படுகோன் நடித்து வருகிறார்.

தீபிகா படுகோனே

தீபிகா படுகோனே

ஓம் சாந்தி ஓம் படத்தின் மூலம் 2007 ல் அறிமுகமான தீபிகா மிகக் குறுகிய காலத்திலேயே பாலிவுட்டின் நம்பர் 1 நடிகையாக மாறினார். மேலும் இவர் நடித்த படங்கள் சர்வசாதாரணமாக 100 கோடி கிளப்பில் நுழைய பாலிவுட்டின் 100 கோடி நாயகி என்ற பெயரும் இவருக்குக் கிடைத்தது.

பிக்கு, பாஜிரோ மஸ்தானி

பிக்கு, பாஜிரோ மஸ்தானி

கடந்த ஆண்டு தீபிகா நடிப்பில் பிக்கு, பாஜிரோ மஸ்தானி மற்றும் தமாஷா ஆகிய படங்கள் வெளியாகின. இதில் பாஜிரோ மஸ்தானி படத்தில் காதலர் ரன்வீர் சிங்குடனும், தமாஷா படத்தில் முன்னாள் காதலர் ரன்பீர் கபூருடனும் நடித்திருந்தார். பிக்கு மற்றும் வரலாற்றுப் படமான பாஜிரோ மஸ்தானி படங்களில் தீபிகா படுகோனின் நடிப்பு ரசிகர்களிடையே லைக்ஸ்களை வாரிக் குவித்தது.

ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்

ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்

இந்நிலையில் கடந்த ஆண்டு ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் வின் டீசலுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வந்து வாசற்கதவைத் தட்டியது. இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த தீபிகா உடனடியாக அந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டார்.

சமூக வலைதளங்களில்

தீபிகா படுகோனே, வின் டீசல் இருவரும் படப்பிடிப்புத் தளத்தில் எடுத்துக் கொண்ட படங்களை வின் டீசல் வெளியிட அது சமூக வலைதளங்களில் வைரலாகியது. மேலும் தான் வசனம் பேசி அதற்கு தீபிகா படுகோன் கட் சொல்வது போன்ற ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வின் டீசல் வெளியிட்டு இருக்கிறார். நேற்று வெளியான ஒரே நாளில் இது 1,73,௦௦௦ லைக்குகளை பெற்றுள்ளது. இந்த வீடியோவைப் பார்க்கும் அனைவரும் இது கண்டிப்பாக ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர்.

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ராவைத் தொடர்ந்து ஹாலிவுட் செல்லும் 2 வது நாயகி என்ற பெருமையை தீபிகா பெற்றிருக்கிறார். எனினும் கடந் வருடம் தனது நடிப்பால் அசத்திய தீபிகா இந்த வருடத்தில் இதுவரை எந்த ஒரு பாலிவுட் படத்தையும் ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் பாலிவுட்டில் இந்த ஆண்டு அவரின் படங்கள் எதுவும் வெளியாகுமா? என்பது சந்தேகமாக இருக்கிறது. தீபிகாவின் இந்தச் செயல் அவரின் சக நடிகைகளுக்கு மகிழ்ச்சியை அளித்த போதிலும், ரசிகர்களை வருத்தமுறச் செய்திருக்கிறதாம்.

English summary
Sources Said After Hollywood Entry Deepika Padukone may not Appear in Any Bollywood Film this Year.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil