கல்கியை சுமப்பவருக்கே கல்கி 2வில் இடமில்லையா?.. தீபிகா படுகோன் அதிரடி வெளியேற்றம்.. என்ன ஆச்சு?
சென்னை: பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி, ஷோபனா உள்ளிட்ட பலர் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான கல்கி திரைப்படத்தில் கல்கியை சுமக்கும் கதாபாத்திரத்தில் நடித்த தீபிகா படுகோன் கல்கி 2 படத்தில் நடிக்க மாட்டார் என்றும் அவரிடம் இருந்து சரியான ஒத்துழைப்பு வரவில்லை என வைஜெயந்தி மூவிஸ் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அம்மா வந்துட்டாங்க, அம்மா வந்துட்டாங்க என அமிதாப் பச்சனை எல்லாம் கையில் வைத்து தாங்க வைத்து கல்கி சுமக்கும் சுமதி கதாபாத்திரத்தில் ஆடைகள் கலைந்து நிர்வாண கோலத்தில் எல்லாம் நடித்து மிரட்டிய தீபிகா படுகோன் திடீரென கல்கி 2 படத்தில் இருந்து நீக்கப்பட என்ன காரணம் என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

முன்னதாக பிரபாஸ் நடிப்பில் உருவாகும் ஸ்பிரிட் படத்தில் அவர் ஹீரோயினாக கமிட்டான நிலையில், 8 மணி நேரம் மட்டுமே ஒரு நாள் வேலை செய்ய முடியும் என நிபந்தனை விதித்தார் என்பதற்காக சந்தீப் ரெட்டி வங்காவுக்கும் அவருக்கும் மோதல் ஏற்பட்டு அந்த படத்தில் இருந்தும் தீபிகா படுகோன் விலகியிருந்தார்.
கல்கி 2வில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்: நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்த கல்கி 2898 ஏடி படத்தில் சுமதி கதாபாத்திரத்தில் நடித்த தீபிகா படுகோன், அதன் 2ம் பாகத்தில் நடிக்க மாட்டார் என்கிற அதிர்ச்சியான அறிவிப்பை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. கர்ப்பிணியாக தீபிகா படுகோன் இருந்தபோது கூட படத்தின் ப்ரோமோஷன்களில் பங்கேற்று இருந்தார். குழந்தை பிறந்து அம்மாவாக அதை பராமரித்து வரும் தீபிகா படுகோன் சில நேரக் கட்டுப்பாடுகளை விதித்த நிலையில், தொடர்ந்து அவர் பெரிய படங்களில் இருந்து விலக்கப் படுகிறாரா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
அல்லு அர்ஜுன் படத்தில் நடிக்கிறாரே: அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் படத்தை பிரமாண்டமாக சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. அந்த படத்தில் தீபிகா படுகோன் கமிட்டாகி நடித்து வருகிறார். முன்னதாக அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்திலும் எந்தவொரு சர்ச்சையுமின்றி தீபிகா படுகோன் நடித்திருந்தார்.
பிரபாஸ் கோபம் தான் காரணமா?: பிரபாஸுக்கு ஜோடியாக சந்தீப் ரெட்டி வங்கா படத்தில் நடிக்க ஒப்பந்தமான தீபிகா படுகோன் சில கருத்து வேறுபாடு காரணமாக அந்த படத்தில் இருந்து விலகியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதிரடியாக அனிமல் படத்தில் படு கிளாமராக நடித்த திரிப்தி டிம்ரியை ஹீரோயினாக மாற்றினர். அந்த கோபத்தில் தான் தற்போது பிரபாஸ் தீபிகா படுகோன் நடித்தால் தான் நடிக்க மாட்டேன் என சொல்லிவிட்டாரா? அதனால் தான் தயாரிப்பு நிறுவனம் தீபிகா படுகோனை மாற்றுகிறதா? என்கிற கேள்விகள் கிளம்பி உள்ளன.

பெரிய முக்கியத்துவம் இல்லை: முதல் பாகத்தில் இருந்த அளவுக்கு தீபிகா படுகோனுக்கு 2வது பாகத்தில் பெரிய வேலை இல்லை என்று கூறுகின்றனர். கல்கி பிறந்துவிட்டால் அவரை சுற்றித்தான் கதை நகரும் என்பதால், தனக்கு முக்கியத்துவம் இல்லாத படத்தில் ஏன் நடிக்க வேண்டும் என தீபிகா படுகோன் அலட்சியப்படுத்தியது தான் அவரை நீக்குவதற்கு காரணமா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. சீரியல் போல இவருக்கு பதில் இவர் என ஸ்ருதிஹாசனை அம்மாவாக ஆக்காமல் இருந்தால் சரி என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











