»   »  15ஐ கட்டி ஆளுவாரா 30 வயசு தீபிகா?

15ஐ கட்டி ஆளுவாரா 30 வயசு தீபிகா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சொக்க வைக்கும் சொக்க வைக்கும் சுந்தரி என்று பாட்டுப் பாடாத குறையாக ரசிகர்கள் கொண்டாடும் தீபிகா படுகோன்தான், 2015ம் ஆண்டில் பாலிவுட்டைக் கலக்கப் போகிறார் என்று இப்போதே கட்டியம் கூற ஆரம்பித்து விட்டனர்.

முப்பதாவது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ள தீபிகாவுக்கு, இந்தாண்டு "முத்திப்பு" சந்தோஷமாக இருக்கும். காரணம், அவரது மூன்று படங்கள் ரிலீசாக உள்ளது.

கடந்த 2007ம் ஆண்டு ஷாரூக்கானின் ஓம் சாந்தி ஓம் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தீபிகா படுகோன். முதல்படமே வெற்றிப்படமாக அமைந்ததால், பாலிவுட் அவரைக் கொண்டாடத் தொடங்கியது.

தொடர்ந்து தீபிகா நடித்த படங்கள் ரூ. 100 கோடிக்கும் மேலான வசூலைக் குவித்ததால் வெற்றிப்பட நடிகையானார் தீபிகா.

அமிதாப் மகளாக...

அமிதாப் மகளாக...

இந்தாண்டு மெகா ஸ்டார் அமிதாப் பச்சனுடன் சேர்ந்து பிகு என்ற படத்தில் நடிக்க உள்ளார் தீபிகா. இப்படத்தில் அமிதாப்பிற்கு மகள் வேடத்தில் தீபிகா நடிக்கிறார். அப்பா - மகள் பாசத்தைக் கூறுவதாக இப்படத்தின் கதைக்களம் அமைக்கப் பட்டுள்ளது.

வரலாற்றுப் படம்...

வரலாற்றுப் படம்...

இதே போல், இந்தாண்டு சஞ்சய் லீலா பன்சாலியின் வரலாற்றுப் படமான பஜிரோ மஸ்தானி படத்திலும் நாயகியாக நடிக்க தீபிகா ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தில் ரன்வீர் சிங் நாயகனாக நடிக்கிறார். தீபிகாவிற்கும், ரன்வீருக்கும் இடையே காதல் இருப்பதாக கிசுகிசுக்கள் உலா வருவது குறிப்பிடத்தக்கது.

தமாஷா...

தமாஷா...

இந்த இருபடங்கள் தவிர ரன்பீர் கபூருடன் தமாஷா படத்திலும் தீபிகா நடிக்கிறார். படத்தின் தலைப்பே படம் காமெடி படம் என்பதை சொல்லாமல் சொல்கிறது.

சென்னை எக்ஸ்பிரஸ்...

சென்னை எக்ஸ்பிரஸ்...

ஏற்கனவே, தீபிகா, ஷாரூக்கானுடன் இணைந்து நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படம் காமெடியும், காதலும் கலந்து தமிழிலும், ஹிந்தியிலும் வசூல் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

கோச்சடையான்...

கோச்சடையான்...

இது தவிர தீபிகா சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் இணைந்து நடித்திருந்த அனிமேஷன் படம் கோச்சடையானும் கடந்த ஆண்டு ரிலீசானது.

இந்த ஆண்டு தீபிகாவின் ஆண்டாக அமையும் என்று இப்போதே பாலிவுட்டில் பேச ஆரம்பித்து விட்டனர்.

English summary
Variety has been the key in the career of actress Deepika Padukone, who turned 29 Monday. The New Year will be no different with three movies as different as "Piku", "Tamasha" and "Bajirao Mastani" slated for release.
Please Wait while comments are loading...