»   »  அந்த வேலை ரொம்ப கஷ்டம், அதுக்கு எனக்கு திறமை இல்லை: தீபிகா படுகோனே

அந்த வேலை ரொம்ப கஷ்டம், அதுக்கு எனக்கு திறமை இல்லை: தீபிகா படுகோனே

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தயாரிப்பாளர் ஆகும் அளவுக்கு தனக்கு திறமை இல்லை என பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளவர் தீபிகா படுகோனே. அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வருவதால் தயாரிப்பாளர்களுக்கு பிடித்த நடிகையாக உள்ளார். அவர் தற்போது சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் பாஜிராவ் மஸ்தானி படத்தில் நடித்து வருகிறார்.

பாஜிராவ் மஸ்தானியில் தீபிகாவுடன் அவரது காதலர் ரன்வீர் சிங் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தயாரிப்பாளர்

தயாரிப்பாளர்

நடிகைகள் பலர் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் தீபிகாவும் தயாரிப்பாளர் ஆவாரா என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில், தயாரிப்பாளர் வேலை கஷ்டமாச்சே என்றார்.

திறமை

திறமை

தயாரிப்பு பணிகளை செய்ய ஆசை உள்ளது. ஆனால் தயாரிப்பாளர் ஆகும் அளவுக்கு எனக்கு திறமை இல்லை. அந்த வேலை ஒன்றும் சுலபம் இல்லை என்றார் தீபிகா.

தமாஷா

தமாஷா

தீபிகாவும் அவரது முன்னாள் காதலர் ரன்பிர் கபூரும் சேர்ந்து தமாஷா படத்தில் நடித்து முடித்துள்ளனர். தமாஷா படத்தின் போஸ்டருக்கு போஸ் கொடுக்க வருமாறு தீபிகாவை அழைத்துள்ளனர். பாஜிராவ் படப்பிடிப்பில் பிசியாக இருந்தபோதிலும் போஸ்டருக்கு போஸ் கொடுக்க ஒரு நாள் முழுவதையும் ஒதுக்கியுள்ளார் தீபிகா.

பெங்காளி படம்

பெங்காளி படம்

பிக்கு படத்தில் தீபிகா பெங்காளி பெண்ணாக நடித்திருந்தார். இந்நிலையில் பெங்காளி படங்களில் நடிக்க வருமாறு அவருக்கு அழைப்பு மேல் அழைப்பு வந்து கொண்டிருக்கிறதாம்.

English summary
Actress Deepika Padukone told that producer role is complex and she doesn't have the capacity for that.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos