»   »  'நான் நல்லவர்களை நம்புவதில்லை' இன்ஸ்டாகிராமைக் கலக்கும் தீபிகா படுகோனே!

'நான் நல்லவர்களை நம்புவதில்லை' இன்ஸ்டாகிராமைக் கலக்கும் தீபிகா படுகோனே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: 'நான் நல்ல மனிதர்களை நம்புவதில்லை' என்னும் வசனத்துடன் 'XXX: தி ரிட்டர்ன் ஆப் சான்டர் கேஜ்' படத்தின் முதல் போஸ்டரை தீபிகா படுகோனே பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

ஹாலிவுட் நடிகர் வின் டீசலுடன் இணைந்து தீபிகா படுகோனே நடித்திருக்கும் முதல் ஹாலிவுட் படம் 'XXX: தி ரிட்டர்ன் ஆப் சான்டர் கேஜ்'.

பாலிவுட்டின் வெற்றி நாயகியாக வலம்வந்த தீபிகாவுக்கு கடந்த வருடம் ஹாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இதனால் பிரியங்கா சோப்ராவைத் தொடர்ந்து ஹாலிவுட் சென்ற நடிகை என்ற புகழும் இவருக்குக் கிடைத்தது.

#look #SerenaUnger #XxX:TheReturnOfXanderCage

A photo posted by Deepika Padukone (@deepikapadukone) on Jul 8, 2016 at 6:48am PDT

வின் டீசல், ஜெட்லி, டோனிஜாவுடன் இணைந்து தீபிகா படுகோனே நடித்திருக்கும் இப்படத்துக்கு இந்திய ரசிகர்கள் மத்தியிலும் அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

இந்நிலையில் முதன்முறையாக இப்படத்தின் போஸ்டர் ஒன்றை தீபிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். ''நான் நல்ல மனிதர்களை நம்புவதில்லை'' என்னும் வசனத்துடன் தீபிகா பகிர்ந்து கொண்டிருக்கும் புகைப்படம் இன்ஸ்டாகிராமைக் கலக்கி வருகிறது.

2017 ம் ஆண்டு 'XXX: தி ரிட்டர்ன் ஆப் சான்டர் கேஜ்' திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபிகா படுகோனே அடுத்ததாக 'பத்மாவதி' என்னும் படத்தில் ரன்வீர் சிங், விக்கி கவுஷாலுடன் சேர்ந்து நடிக்கவிருக்கிறார்.

English summary
Deepika Padukone Shared her Upcoming Hollywood Movie Poster in Instagram.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil