»   »  அமிதாப் பச்சனை ஒப்பந்தம் செய்ததால் ரித்திக் படத்தில் இருந்து வெளியேறிய தீபிகா?

அமிதாப் பச்சனை ஒப்பந்தம் செய்ததால் ரித்திக் படத்தில் இருந்து வெளியேறிய தீபிகா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: அமிதாப் பச்சனை ஒப்பந்தம் செய்ததால் ரித்திக் ரோஷன் நடிக்கும் படத்தில் இருந்து தீபிகா படுகோனே வெளியேறியதாக கூறப்படுகிறது.

தூம் 3 படத்தின் இயக்குனர் விஜய் கிருஷ்ண ஆச்சார்யா ரித்திக் ரோஷனை வைத்து ஒரு படத்தை எடுக்கிறார். அந்த படத்தில் ரித்திக் ஜோடியாக முதல் முறையாக தீபிகா படுகோனே ஒப்பந்தம் ஆனார். இந்நிலையில் ஆச்சார்யா பாலிவுட் ஜாம்பவான் அமிதாப் பச்சனை தனது படத்தில் ஒப்பம் செய்துள்ளார்.

அமிதாபை ஒப்பந்தம் செய்த பிறகு தீபிகா செய்த வேலை பற்றி தான் பாலிவுட்டில் பேச்சாக கிடக்கின்றது.

தீபிகா

தீபிகா

ஆச்சார்யா அமிதாப் பச்சனை ஒப்பந்தம் செய்த வேகத்தில் அந்த படத்தில் இருந்து தீபிகா படுகோனே வெளியேறியுள்ளார். தீபிகா ஏன் இப்படி செய்தார் என்று தான் பலரும் பேசுகிறார்கள்.

பிக்கு

பிக்கு

தீபிகா அமிதாப் பச்சன் மகளாக நடித்த பிக்கு படம் சூப்பர் ஹிட்டானது. படத்தின் வெற்றியைக் கொண்டாட பார்ட்டி கொடுத்தார் தீபிகா. ஆனால் அந்த பார்ட்டிக்கு அவர் அமிதாபை அழைக்கவில்லை. அமிதாபை பார்ட்டிக்கு அழைக்க மறந்துவிட்டதாகவும், அதற்காக தன்னை தானே மன்னிக்கப் போவது இல்லை என்றும் கூறினார் தீபிகா.

பிரச்சனை

பிரச்சனை

அமிதாப் பச்சனுக்கும், தீபிகாவுக்கும் இடையே என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. அமிதாப் நடிப்பதால் தீபிகா விலகினாரா, இல்லை தானாக விலகினாரா என்பதை அவர் தான் தெரிவிக்க வேண்டும்.

ரன்வீர் சிங்

ரன்வீர் சிங்

தீபிகா படுகோனே தற்போது தனது காதலர் ரன்வீர் சிங்குடன் சேர்ந்து சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் பாஜிராவ் மஸ்தானி படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக தீபிகாவும், ரன்வீரும் சேர்ந்து பன்சாலியின் ராம் லீலா படத்தில் ஜோடியாக நடித்தனர்.

English summary
Deepika Padukone has walked out of a movie after director Vijay Krishna Acharya roped in Amitabh Bachchan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil