»   »  'ரோபோட்'டில் தீபிகா?!

'ரோபோட்'டில் தீபிகா?!

Subscribe to Oneindia Tamil
Deepika Padukone
மிகக் குறுகிய காலத்தில் பாலிவுட்டில் முன்னணி இடத்தைப் பிடித்துவிட்ட தீபிகா படுகோனுக்கு மச்சம் போலிருக்கிறது. அடுத்ததாக ரஜினியுடன் ஜோடி சேர அவருக்கு வாய்ப்பு கிடைக்கப் போகிறதாம்.

ஷங்கர்-ரஜினி மீண்டும் இணையும் மிக பிரமாண்டமான படைப்பான ரோபோட் படத்தில் இடம் பிடிக்க ஷங்கரின் பழைய ஹீரோயின்களான சதா முதல் ஷ்ரேயா வரை பலரும் போட்டி போட்டி வருகின்றனர். சிவாஜி வாய்ப்பை தவறவிட்ட த்ரிஷா தரப்பிலும் நப்பாசையுடன் இந்த வாய்ப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இவர்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு தீபிகா படுகோன் மீது கண் வைத்துள்ளார் ஷங்கர் என்கிறார்கள். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்குப் போய் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்குடன் கேண்டில் லைட் டின்னர் சாப்பிட்டு பிறந்தநாளை கொண்டாடிய தீபிகாவுக்கு வயது 22 தான்.

பெங்களூர் மவுண்ட் கார்மல் கல்லூரியில் பி.ஏ. சோஷியாலஜி படித்தவருக்கு படிப்பு ஏறவே இல்லை. இதனால் மாடலிங் பக்கமாகக் போய்விட்டு சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார்.

இவரது தாய்மொழியான கன்னடத்தில் வெளியான ஹேப்பி நியூ இயர் தான் தீபிகாவின் முதல் படம். அப்படியே பாலிவுட்டில் நுழைந்தவருக்கு ஷாருக்கானின் ஓம் சாந்தி ஓம் உச்சத்தில் தூக்கி வைத்துவிட்டது.

ஒரு படம் தான் ஓடியது என்றாலும் பிரபல ஆண் மாடல் நிகார், டோனி, யுவராஜ் சிங், நடிகர் ரன்பீர் கபூர் என பலருடனும் ஒரே நேரத்தில் கிசுகிசுக்கப்படுகிற அளவுக்கு பிஸியாக இருக்கிறார் தீபிகா.

இப்போதே தனது சம்பளத்தை ரூ. 1 கோடி வரை உயர்த்திவிட்ட தீபிகா வசம் 3 இந்திப் படங்கள் உள்ளன.

இந் நிலையில் தான் இவரை ஷங்கர் தமிழுக்குக் கொண்டு வரப் போகிறார் என்கிறார்கள். தீபிகா முன்பே தமிழுக்கு வந்திருக்க வேண்டியவர் தான். தல அஜீத்துடன் ஜோடியாக ஒரு படத்தில் புக் ஆகியிருக்க வேண்டியவர். ஏனோ அந்த புராஜெக்ட் டிராப் ஆகிவிட்டது.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil