»   »  மஜ்தார் படத்தில் சல்மான் கானுடன் நடிக்க ரெடி, ஆனால் ஒரு கன்டிஷன்: தீபிகா

மஜ்தார் படத்தில் சல்மான் கானுடன் நடிக்க ரெடி, ஆனால் ஒரு கன்டிஷன்: தீபிகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: கபீர் கான் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்க உள்ள மஜ்தார் படத்தில் நடிக்க தீபிகா படுகோனே ஒரு நிபந்தனை விதித்துள்ளார்.

கபீர் கான் இயக்கத்தில் சல்மான் கான் நடித்த பஜ்ரங்கி பாய்ஜான் படம் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் கபீரும், சல்மானும் சேர்ந்து மீண்டும் பணியாற்ற உள்ளனர். அந்த படத்திற்கு மஜ்தார் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மஜ்தாரில் சல்மானுக்கு ஜோடியாக நடிக்குமாறு கபீர் தீபிகா படுகோனேவிடம் கேட்டுள்ளார்.

தீபிகா

தீபிகா

சல்மான் கானுடன் நடிக்கிறேன். ஆனால் படத்தில் என் கதாபாத்திரம் வெயிட்டாக இருக்க வேண்டும். சும்மா வந்து தலையை காட்டிவிட்டு மரத்தை சுற்றி சுற்றி வந்து பாடி, ஆடுவதோடு முடிந்துவிடக் கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளார் தீபிகா.

ஹாலிவுட்

ஹாலிவுட்

2013ம் ஆண்டில் இருந்து பாலிவுட்டின் வெற்றி நாயகியாக இருந்து வரும் தீபிகா தற்போது வின் டீசலின் XXX: தி ரிட்டர்ன் ஆப் சான்டர் கேஜ் என்னும் ஹாலிவுட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இது தான் தீபிகா நடிக்கும் முதல் ஹாலிவுட் படம்.

சுல்தான்

சுல்தான்

முன்னதாக சல்மான் கானின் சுல்தான் படத்தில் நடிக்க தீபிகாவிடம் தான் கேட்டார்கள். குத்துச்சண்டை வீராங்கனையாக நடிக்க அவரிடம் கேட்கப்பட்டது. ஆனால் அவரோ படத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இல்லை என்று கூறி நடிக்க மறுத்துவிட்டார்.

5 முறை

5 முறை

பஜ்ரங்கி பாய்ஜான், ஜெய் ஹோ, ஷேர் கான், கிக், சுல்தான் என சல்மான் கான் நடித்த 5 படங்களில் நடிக்க வந்த வாய்ப்புகளை ஏற்க மறுத்துள்ளார் தீபிகா. கேட்டால் கதாபாத்திரம் பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

பிரேம் ரத்தன் தன் பாயோ

பிரேம் ரத்தன் தன் பாயோ

சல்மான் கான், சோனம் கபூர் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம் பிரேம் ரத்தன் தன் பாயோ. அந்த படத்தில் தீபிகாவை நடிக்க வைக்க நினைத்தாராம் இயக்குனர். ஆனால் தீபிகா வேண்டாம் என்று சல்மான் கூறிவிட்டார். தீபிகா ஏற்கனவே பல படங்களில் பிசியாக இருந்ததால் தனது படத்திற்கு வேண்டாம் என்றார் சல்மான்.

English summary
Deepika Padukone has accepted to act with Salman Khan in Kabir Khan's ‘Majhdhaar’ with one condition.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil