»   »  தங்கச்சி நடிகையான தீபு

தங்கச்சி நடிகையான தீபு

Posted By:
Subscribe to Oneindia Tamil

கதாநாயகி வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் தங்கச்சி வேடத்துக்கு ஓ.கே. சொல்லிவிட்டார் தீபு.

அன்பு படத்தில் நாயகியாக தீபு அறிமுகமானார். படம் தொடங்கப்பட்டபோது, கேரள நடிகைகளைப் போல்பேட்டி கொடுத்தார்.

நான் பிளஸ்டூ தான் படிக்கிறேன். வற்புறுத்திக் கூப்பிட்டதால்தான் நடிக்க வந்தேன். எக்காரணம் கொண்டும்கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். அப்படி நடிக்காவிட்டால் சான்ஸ் கிடையாது என்று கூறினால், பேசாமல் படிக்கப்போய்விடுவேன் என்று கூறினார்.

இதைக் கேட்ட சினிமா ஆட்கள், நீ படிக்கப் போம்மா என்று சொல்லாத குறையாக கோலிவுட் கதவைப் பூட்டிவிட்டார்கள். சாவித்திரி, ரேவதி ரேஞ்சில் கற்பனை வானில் பறந்து கொண்டிருந்த தீபு, தலைகுப்புற கீழேவிழுந்ததில் அதிர்ந்து போனார்.

அவர் நிலைக்குப் பரிதாபப்பட்ட சக நடிகை ஒருவர், கோலிவுட் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொடுத்தார். அதைக்கெட்டியாகப் பிடித்துக் கொண்ட தீபு, தடாலடிக் காரியங்கள் சில செய்து, உள்ளம், நீ மட்டும் ஆகிய படவாய்ப்புகளைப் பெற்றார். படத்தில் ஒப்பந்தம் செய்யும்போதே, சேலை கட்டுவதையெல்லாம் வீட்டிலேயே மறந்துவிட்டுத்தான் சூட்டிங்குக்கு வரவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்.

தீபுவும் அதற்கேற்றாற்போல் சமர்த்தாக நடந்து கொண்டார். கவர்ச்சி காட்டத் தயார் என்று சொல்லிடைரக்டர்கள் சொன்னது போல நடந்து கொண்டார். ஆனால், அந்தப் படம் சரியாகப் போகாததால்,தீபுவின் கவர்ச்சி பேசப்படவில்லை. தொடர்ந்து வாய்ப்புகள் ஏதும் வரவில்லை.

வேறு வழியில்லாமல் இப்போது தங்கச்சி வேடங்களுக்குத் தாவியுள்ளார். ஜெயம் ரவி நடித்து வரும் எம்.குமரன்,சன் ஆப் மகாலட்சுமி படத்தில் ரவியின் தங்கையாக தீபு நடிக்கிறார்.

அடுத்து என்ன மேடம், டி.வியா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil