»   »  ஸ்டுடியோ கட்டும் தேவயானி

ஸ்டுடியோ கட்டும் தேவயானி

Subscribe to Oneindia Tamil

சினிமாவில் கொஞ்ச காலம், இப்போது டிவி என தொடர்ந்து நடித்து வரும் தேவயானி, தெள்ளத் தெளிவாக செட்டிலாகி வருகிறார்.

கொங்கனி பாவை தேவயானி, தொட்டால் சினுங்கி மூலம் நடிகையாக அறிமுகமானவர். நடிக்க வந்த கொஞ்ச காலத்திலேயே இயக்குநர் ராஜகுமாரனுடன் காதல் ஏற்பட்டு வீட்டை விட்டு வெளியேறி கல்யாணத்தையும் முடித்துக் கொண்டார்.

கல்யாணத்திற்குப் பிறகும் நடிப்பேன் என்று அறிக்கை விட்டார் தேவயானி. ஆனால் அவருக்கேத்தது போல படங்களும் வரவில்லை, ஹீரோக்களுக்கும் தேவயானியை தேட நேரம் இல்லை.

இதனால் சினிமாவிலிருந்து மெதுவாக ஒதுங்கிய தேவயானி, இடையில் கணவரின் இயக்கத்தில் காதலுடன் என்ற படத்தைத் தயாரித்து அதில் ஹீரோயினாகவும் நடித்தார். ஆனால் படமும் ஓடவில்லை, நிறைய செலவும் வைத்து விட்டது.

இந்தப் படத்துக்காக பைனான்சியர் அன்புச் செழியனிடம் கடன் வாங்கி படாதபாடு பட்டு கடனை அடைத்தார் தேவயானி. சமீபத்தில் மீண்டும் ஒரு படத்தை தயாரிக்கலாம் என ராஜகுமாரன் கேட்டபோது கூட வேண்டவே வேண்டாம் என்று ஒேர போடாக போட்டு மறுத்து விட்டார் தேவயானி.

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கோலங்கள் தொடரில் படு மும்முரமாக நடித்து வருகிறார் தேவயானி. இதில் நல்ல துட்டு கிடைப்பதாலும், நிம்மதியாக நடித்தோமா, வீட்டுக்குப் போனோமா என்று இருப்பதால் ஹாயாக நடித்துக் கொண்டிருக்கிறார் தேவயானி.

இந்த நிலையில் படு விவரமாக ஒரு காரியத்தை தொடங்கியுள்ளார். அதாவது சென்னை அசோக் நகரில், தனது வீட்டுக்குப் பக்கத்திலேயே பக்காவான ஒரு ஸ்டுடியோவைக் கட்ட ஆரம்பித்துள்ளார் தேவயானி.

எடிட்டிங், டப்பிங் என சகல வசதிகளுடன் கூடியதாக இந்த ஸ்டுடியோ உருவாகி வருகிறதாம். டிவி தொடர்களின் டப்பிங்கையும், எடிட்டிங்கையும் இங்கேயே மேற்கொள்ள முடியுமாம். சினிமாவுக்கும் கூட இதை பயன்படுத்த முடியுமாம்.

நிரந்தர வருமானம் வருவதற்கேற்ற வகையில் படு நிதானமாக காய் நகர்த்தி வாழ்க்கையில் செட்டிலாகி வரும் தேவயானியின் புத்திசாலித்தனத்தை திரையுலகில் பலரும் அவர் காதுபடவே பாராட்டுகிறார்களாம்.

கெட்டிக்காரிதான்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil