»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

காதல் கணவருடன் தனிக்குடித்தனம் நடத்தி வரும் தேவயானி, புதிதாக கார் வாங்கியுள்ளார். நடிகைகள் கார் வாங்குவதில் என்ன விசேஷம் என்கிறீர்களா?.

நடிப்பில் பிசியாக இருந்தபோது தேவயானி வாங்கிய அனைத்துப் பொருட்களையும் அவரது அம்மா பறித்துக் கொண்டு விட்டார். சைக்கிள் கூட இல்லாமல்கஷ்டப்பட்டு வந்தார் தேவயானி. இப்போது கஷ்டப்பட்டு ஒரு கார் வாங்கி விட்டார்.

திருமணத்திற்குப் பிறகு புக்கான படங்களிலிருந்து நீக்கப்பட்டார் தேவயானி. இதனால் மனம் உடைந்திருந்த தேவயானி, மனதைத் தேற்றிக் கொண்டு படவாய்ப்புகளைத் தேடி வந்தார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது.

தற்போது அவர் கையில் 3 படங்கள் உள்ளன. தனது விடாயற்சியால் ஒவ்வொரு படமாக அவருக்குக் கிடைக்கத் தொடங்கியிருக்கிறது. ஏற்கனவே"கிளிக்" மற்றும் "அழகு" ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தற்போது பிரகாஷ் ராஜ் சொந்தமாக தயாரிக்கவுள்ள படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

கையில் படம் வரத் தொடங்கியுள்ளதால், தெம்பாக வெளியில் தலை காட்டத் தொடங்கியுள்ளார் ராஜகுமாரனின் வீட்டுக்காரம்மா.

தேவயானி... ஒரு போனஸ் செய்தி

"கிளிக்"கில் 2 நாயகிகள். மீனாவும், மலையாளக் குயில் கீதுவும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்கள். தற்போது கீது கழற்றி விடப்பட்டுள்ளார்.அவருக்குப் பதில் தேவயானி ஒப்பந்தமாகியுள்ளார். கீது போனதற்கும், தேவயானி வந்ததற்கும் காரணம் தெரியவில்லை. எப்படியோ தேவயானிக்குமீண்டும் வந்தது வாழ்க்கை!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil