»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

தேவயானி ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார். கல்யாணத்திற்குப் பிறகு பல படங்களில் இருந்து நீக்கப்பட்ட அவர் இப்போது 10க்கும் மேற்பட்டபடங்களைக் கையில் வைத்துக் கொண்டு சந்தோஷத் திக்குமுக்காடலில் இருக்கிறார்.

தமிழ் தவிர பிற மொழிப் படங்களும் அவருக்கு வந்த வண்ணம் உள்ளதாம். அழகியில் தேவயானியின் நடிப்பை பாராட்டாதவர்களே இல்லையாம்.

அதேபோல, மலையாளத்திலிருது தமிழுக்கு வரவுள்ள தென்காசிப் பட்டணம் படத்திலும் அவருக்கு நல்ல ரோல் கிடைத்திருக்கிறது. மலையாள சூப்பர் ஸ்டாரினிசம்யுக்த வர்மாவுக்குப் போட்டியாக அருமையான கதாபாத்திரமாம்.

சந்தோஷத்தின் உச்சகட்டமாக கமல்ஹாசனின் புதிய படமான பஞ்சதந்திரத்திலும் தேவயானியும் நடிக்கிறாராம். அதுவும் கமல்ஹாசனுக்கு ஜோடியாக.

ஏற்கனவே கமல்ஹாசனின் பம்மல் கே.சம்பந்தம் படத்தில் தேவயானிதான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அந்த சமயம் பார்த்து திடீரெனதேவயானிக்கு கல்யாணம் ஆகி விட்டதால், அவரை நீக்கி விட்டு சினேகாவை போட்டு விட்டார்கள்.

இதனால் கமல்ஹாசனிடம் தனது மனக்குமுறலை வெளியிட்டார் தேவயானி. இப்போது விட்டு விடுங்கள் அடுத்த படத்தில் கண்டிப்பாக வாய்ப்புகொடுக்கிறேன் என்று அப்போது உறுதி மொழி கொடுத்திருந்தார் கமல். அதை மறவாமல், பஞ்சதந்திரத்தில் தேவயானிக்கு வாய்ப்பு அளித்துள்ளார்கமல்.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் தேவயானி நடிக்கும் இரண்டாவது படம் பஞ்சதந்திரம் என்பது குறிப்பிடத்தக்கது. கமலின் தெனாலியில் ஜெயராம்ஜோடியாக வந்தவர், பஞ்சதந்திரத்தில் கமலுக்கே ஜோடியாக நடிக்கிறார்.

செம ஆஃபர் இல்லே !

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil