Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
நச்சுன்னு தேவயானி செய்த அந்த ஒரு அசத்தல் காரியம்...குவியும் பாராட்டுக்கள்
அந்தியூர் : தொட்டாச்சிணுங்கி, கல்லூரி வாசல் ஆகிய படங்களில் சிறிய ரோல்களில் நடித்த தேவயானி, காதல் கோட்டை படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு டாப் ஹீரோயின்களில் ஒருவராகி விட்டார். விஜய், அஜித், சரத்குமார், மம்முட்டி, சத்யராஜ், பிரபு உள்ளிட்ட ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.
தமிழில் மட்டுமல்ல மலையாளம், பெங்காலி, தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளிலும் தேவயானி நடித்துள்ளார். புகழின் உச்சியில் இருந்த தேவயானி பலரின் கனவுக்கன்னியாகவும் இருந்துள்ளார். ஹோம்லி லுக், அலட்டல் இல்லாத நடிப்பால் அனைவரின் மனங்களையும் கவர்ந்தவர் தேவயானி.
டைரக்டர் ராஜகுமாரன் இயக்கிய நீ வருவாய் என, விண்ணுக்கும் மண்ணுக்கும் உள்ளிட்ட சில படங்களில் பணியாற்றிய போது ராஜகுமாரனுக்கும், தேவயானிக்கும் இடையே காதல் ஏற்பட்டது. ஆனால் இவர்களின் காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதிக்கவில்லை.
டீயில
எச்சில்
துப்பி
கொடுப்பாரே..
அந்த
நடிகரா
இவர்?
காதலியை
கரம்
பிடித்த
காதல்
பட
நடிகர்!

ரகசிய திருமணம்
இதனால் வீட்டை விட்டு வெளியேறிய தேவயானி, ராஜகுமாரனை 2001 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருத்தணி முருகன் கோயிலில் மிக எளிய முறையில் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு பிரியங்கா, இனியா என்ற இரு மகள்கள் உள்ளனர்.

தோல்வி படங்கள்
திருமணத்திற்கு பிறகும் கமிட்டான சில படங்களில் நடித்த தேவயானி, பிறகு சினிமாவில் இருந்து சின்னத்திரையில் அலைகள், மஞ்சள் மகிமை உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். தொடர்ந்து நடிப்பிற்கு முழுக்கு போட்டு விட்டு கணவர் ராஜகுமாரனுடன் சேர்ந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தினார். அதில் இவர்கள் தயாரித்த 2 படங்களும் தோல்வி அடைந்தன.

பள்ளி ஆசிரியையான தேவயானி
அதன் பிறகு தேவயானி என்ன ஆனார் என்ற தகவலே இல்லாமல் இருந்தது. சில நாட்களுக்கு முன் பள்ளி ஒன்றில் தேவயாணி பகுதி நேர ஆசிரியையாக பணியாற்றி வருவதாக கூட தகவல் வந்தது. சமீபத்தில் புதுப்புது அர்த்தங்கள் என்ற சீரியல் மூலம் மீண்டும் சின்னத்திரையில் ரீஎன்ட்ரி கொடுத்தார் தேவயானி.

சொந்த ஊரில் விவசாயம்
நடிகை தேவயானியின் கணவர் இயக்குநர் ராஜகுமாரன், ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த சந்திப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். சொந்த ஊருக்கு அடிக்கடி செல்லும் தேவயானி தம்பதிகள், அருகில் உள்ள மாத்தூரில் நிலம் வாங்கி விவசாயம் செய்து வருகின்றனர்.

தேவயானி செய்த காரியம்
அவர்களது தோட்டத்துக்கு அருகே ஒருவர் 2 ஏக்கர் விவசாய நிலத்தை விற்பனை செய்வதற்காக பிளாட்டுகளாக மாற்றியுள்ளார். இதையறிந்த தேவயானி அந்த நபரிடம் 2 ஏக்கர் வீட்டு மனைகளையும் விலை கொடுத்து வாங்கியுள்ளார்.பின்னர் அதை விவசாய நிலமாக மாற்றி தற்போது 2 ஏக்கரில் செண்டுமல்லி பயிரிட்டுள்ளார். தற்போது அந்த விவசாய நிலம் முழுவதும் செண்டு மல்லி பூத்துக் குலுங்குகிறது.

குவியும் பாராட்டு s
விவசாய நிலங்கள் பிளாட்டுகளாக மாற்றப்பட்டு வரும் நிலையில், நடிகை தேவயானி, பிளாட்டுகளை விவசாய நிலங்களாக மாற்றி சாகுபடி செய்து வருவதை அப்பகுதி விவசாயிகள் பாராட்டி வருகின்றனர். ரசிகர்கள், பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.